புலிகள் இல்லையென்றில்லை –தம்பிராசா!
Thambiகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரித்துவிட்டனர்.ஆனால் இவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதால் விடுதலைப்புலிகள் இல்லையென்று அர்த்தப்படாதென தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் அடக்குமுறைகளிற்கெதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு.தம்பிராசா.
யாழ். ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிட்டுள்ள அவர் சுமந்திரன் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர்களென கைதானவர்கள் எதற்கு கைது செய்யப்பட்டுள்ளரென்பது அவர்களிற்கே தெரியவில்லையெனவும் கூறினார்.
இலங்கை அரசிற்கு ஜநாவினில் கால அவகாசம் வழங்கும் விடயம் தொடர்பினில் மீண்டுமெர்ருமுறை கூட்டமைப்பினர் சிந்திக்கவேண்டுமென தெரிவித்த அவர் உண்மையினில் தேசிய தலைவரின் நிழல் படர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எஞ்சியிருப்பது சிவசக்தி ஆனந்தனே எனவும் தெரிவித்தார்.தனியொருவனாக நின்று போராடி சிவசக்தி ஆனந்தனிற்கு மக்கள் காலத்தால் அழியாத நினைவுகளை வழங்குவார்களெனவும் தெரிவித்தார்.
மக்களது அணிதிரண்ட வெகுஜனப்போராட்டங்களே உண்மையான நிலைப்பாட்டை கூட்டமைப்பினரிற்கு விரைவினில் தெளிவுபடுத்துமென சுட்டிக்காட்டிய அவர் அதற்கான அறைகூவலையும் விடுத்துள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பினரது இரட்டை வேடம் நிச்சயம் மக்களிடையே அவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையும் ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen