வீரவேங்கை ஞானி அவர்களின் வரலாறு

அவர் பிறந்து வளர்ந்த சொந்த இடம் வடமராட்சி மண் மடத்தடி அல்வாய் கிழக்கு அல்வாய்
அவர் வீட்டில் செல்லப் பிள்ளையாக வாழந்தார் அதனால் அவரின் சொந்த உறவுகள் அவரை தம்பி என்றுதான் அழைப்பார்கள்
அவர் தோற்றத்திலும்,நிறத்திலும் அழகானவர்
அவர் பருத்தித்துறையில் யா/வேலாயுதம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்றவர்
அவர் பரீட்சையில் கூட மார்க் 100 புள்ளியை விட குறைந்ததாக சரித்திரமே இல்லை
அவர் பாடசாலைகள்,ரியூட்டறி,ஊர் மக்கள் அனைவரோடும் அமைதியாகவும் அடுத்தவருக்கு கரச்சல்கள் கொடுக்காமல் நல்லதொரு சிறுவனாக வாழ்ந்தவர் எங்கள் ஞானி
அதனால்தான் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளை போல பாசம் வைத்து அவரை வழி நடத்தினார்கள்
ஞானி அவர்கள் தனது ஊரில் சதாப்பொன்ஸ் கல்வி நிலையத்திலும் கல்வி கற்றார் சிறப்பாக அவரை ஆசிரியர் அப்பண்ணா,நவசியண்ணா அவர்களுக்கு ஞானி என்றால் ரொம்ப உயிர் பாசமாக இருந்தார்கள்
அப்படி நல்ல சிறுவனாக ஆற்றலும் பெருமையும் தேடி கொடுத்தான் பெற்றோருக்கு
அவர் சிறுவயதில் ஆங்கிலத்தில் மேடைகள் ஏறி பேசியவன் ஞானி
ஆங்கிலப்பாடத்தை சிறப்பாக கற்றுக் கொடுத்து மேடை ஏற வைத்தவர் ஞானியின் ஊர் ஆசிரியர் சன் மாஸ்டர்
ஞானி சிறுவயதில் புலிகள் என்றால் உயிராக நேசித்து வாழ்ந்தவர்
அதனால்தான் அவர் கல்வியை இடை நிறுத்தி 1991 ஆம் ஆண்டு ஞானியும்,கடற்புலி செழியனும் ஒன்றாக புலிகளுடன் போய் இனைந்தார்கள் இவர்கள் இருவரும் சொந்த உறவினரும்,ஒரே வகுப்பு நண்பராகவும் ஊரில் வாழ்ந்தவர்கள்
1992 பங்குனி 17 மணலாற்றில் கொக்குத்தொடுவாய் முகாமில் இருந்து கஜபார நடவடிக்கையை மேற்கொள்ள வெளியேறிய சிறிலங்கா படையினருடன் கடுமையான போர் நடந்த போது அதில் வீரச்சாவு அடைந்தார் ஞானி அண்ணா
ஆனால் அவரின் வீரமரண அறிவித்தலை கேட்ட சதான்கல்வி நிலைய ஆசிரியர்களும் அழுதார்கள்,பெற்றோர்களின் அழுகை கதறலை விட ,அவரின் வகுப்பு மாணவிகளின் அழுகை கதறல்தான் அங்கு நின்றர்களின் மனதை நிலை நடுங்க வைத்தது
ஞானி என்ற பெயர் அழியவே கூடாது என்று சதாப்பொன்ஸ் கல்வி நிலைய ஆசிரியர் அப்பண்ணா ஞானியின் தம்பிக்கு அந்த பெயர் வைத்தார் அது அழியாமல் இருந்ததுதான் ஆனால் அது இப்ப அழிந்து விட்டது
ஏன் என்றால் ஞானியின் தம்பியும் நாட்டுக்காக போராட சென்றவர்தான் அவரின் நிலமை விபரம் எதுவுமில்லை இருக்கிறாரா,இல்லையா என்று தெரியாது
உண்மையிலும் ஞானியை ஈன்றவளுக்கு நன்றி சொல்ல வேண்டும்...

0 Kommentare:

Kommentar veröffentlichen