இனத்தின் உயிர்ப்பை காக்கும் தாயாய்
உயிரைத் தருவது செம்மொழித் தமிழே ! - நம்
இனத்தின் பெயர்வில் தமிழை விதைத்து
போற்றி வளர்த்தது செம்மொழித் தமிழே !
புலத்தில் எழுந்த தமிழர் ஆலய
மூல மூர்த்தி தமிழேந்தல் உருவே ! - நம்
நிலத்தின் தலைவன் போற்றித் தந்த
மாமனிதம் கண்ட நாகலிங்க திருவே !
வள்ளுவன் கண்ட ஒழுக்க நெறியை
வெண்மனம் கொண்டு காத்த மதியே ! - நம்
உள்ளத்தின் உள்ளே ஒளியாய் வீசும்
தெள்ளு தமிழின் பெருமன வெளியே !
புன்னகை பூத்திடும் முகத்தின் அழகால்
தண்தமிழ் தன்னை பதிக்கும் அறிவே ! - வான்
வெண்மதி போலெ மனங்களை ஈர்த்து
வண்டமிழ் ஊட்டும் தாய்மையின் ஊற்றே !
முதிர்ந்த வயதிலும் முத்தமிழ் வளர்க்க
கதிர்களை வீசியே பரவியே எழுந்தீர்! - வான்
மழையினை போலே யாவர்க்கும் சமமாய்
தமிழினைப் பொழிந்துமே மனத்தினில் குளிர்ந்தீர் !
தமிழினைத் தவிர யாதொன்றும் நினையா
தவத்தினில் மூழ்கி வாழ்வினை வாழ்ந்தீர் ! - நம்
தாய்த்திரு நாட்டின் விடுதலை விடிவை
தரணியில் பதிக்க தமிழினைத் தொடுத்தீர் !
என்னப் பெற்றாலில் தமிழினை விதைத்துமே
வெள்ளி தாண்டிய கற்பக தருவே ! - நம்
தமிழாலய வேரின் மூலத்தின் உறுதியில்
தமிழின் உறுதியை ஊன்றிய பதியே !
தமிழின் இனிமைக்குள் தமிழின் பெருமைக்குள்
தமிழின் செம்மைக்குள் நின்னைக் காண்போம் ! - இந்த
வையத்தின் வெளிதனில் வீசும் தமிழ்க்காற்றில்
பைந்தமிழ் காற்றாக்கி உனை சுவாசிப்போம் .
உயிரைத் தருவது செம்மொழித் தமிழே ! - நம்
இனத்தின் பெயர்வில் தமிழை விதைத்து
போற்றி வளர்த்தது செம்மொழித் தமிழே !
புலத்தில் எழுந்த தமிழர் ஆலய
மூல மூர்த்தி தமிழேந்தல் உருவே ! - நம்
நிலத்தின் தலைவன் போற்றித் தந்த
மாமனிதம் கண்ட நாகலிங்க திருவே !
வள்ளுவன் கண்ட ஒழுக்க நெறியை
வெண்மனம் கொண்டு காத்த மதியே ! - நம்
உள்ளத்தின் உள்ளே ஒளியாய் வீசும்
தெள்ளு தமிழின் பெருமன வெளியே !
புன்னகை பூத்திடும் முகத்தின் அழகால்
தண்தமிழ் தன்னை பதிக்கும் அறிவே ! - வான்
வெண்மதி போலெ மனங்களை ஈர்த்து
வண்டமிழ் ஊட்டும் தாய்மையின் ஊற்றே !
முதிர்ந்த வயதிலும் முத்தமிழ் வளர்க்க
கதிர்களை வீசியே பரவியே எழுந்தீர்! - வான்
மழையினை போலே யாவர்க்கும் சமமாய்
தமிழினைப் பொழிந்துமே மனத்தினில் குளிர்ந்தீர் !
தமிழினைத் தவிர யாதொன்றும் நினையா
தவத்தினில் மூழ்கி வாழ்வினை வாழ்ந்தீர் ! - நம்
தாய்த்திரு நாட்டின் விடுதலை விடிவை
தரணியில் பதிக்க தமிழினைத் தொடுத்தீர் !
என்னப் பெற்றாலில் தமிழினை விதைத்துமே
வெள்ளி தாண்டிய கற்பக தருவே ! - நம்
தமிழாலய வேரின் மூலத்தின் உறுதியில்
தமிழின் உறுதியை ஊன்றிய பதியே !
தமிழின் இனிமைக்குள் தமிழின் பெருமைக்குள்
தமிழின் செம்மைக்குள் நின்னைக் காண்போம் ! - இந்த
வையத்தின் வெளிதனில் வீசும் தமிழ்க்காற்றில்
பைந்தமிழ் காற்றாக்கி உனை சுவாசிப்போம் .
0 Kommentare:
Kommentar veröffentlichen