ஆணைக்குழு அல்ல பூனைக்குழுக்களின் அறிக்கைகளும் குப்பைத் தொட்டியில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
தாம் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களில் சாட்சியமளித்தாகவும், எனினும் அவை தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் இறுதி யுத்தத்தில் தனது மகளை தவறவிட்டுள்ள தாய் தெய்வானை தெரிவித்துள்ளார்.

தாம் பொம்மைகள் அல்ல என தெரிவிக்கும் மக்கள் அரசியல்வாதிகளும் தங்களை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதாகவும், குற்றம்சுமத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மிலேச்சதனமான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வட்டுவாகலில் இராணுவத்திடம் தமது உறவுகளை கையளித்ததாகவும் எனினும் இதுவரை தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமது உறவுகள் தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen