ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள
தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதன் மூலம் இலங்கையின் நல்லிணக்க
மற்றும் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு ஐ.நா உறுப்பு
நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்க் சி. ரோனர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நிர்வாகத்தின் நல்லிணக்கத்தை முன்னிறுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டத்தக்கதாகும்.
இலங்கை மக்கள் மத்தியில் நீடித்த சமாதானம், நீதியை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான பிரேரணையை அமெரிக்காவும், இலங்கை மையக் குழுவின் ஏனைய நட்பு நாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 13ஆம் திகதி முன்வைத்தன.
முரண்பாடுகள் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கு உதவும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனநாயக ஆட்சி முறையையும், சுதந்திரத்தையும் வலுப்படுத்தும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கு ஆதரவளிக்கும் குறித்த பிரேரணை உள்வாங்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதன்படி இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Kommentare:
Kommentar veröffentlichen