பிரிட்டனிடம் இருந்து பிரிந்து செல்லும் சுதந்திரத்திற்கான புதிய சர்வஜன
வாக்கெடுப்பொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்கொட்லாந்து தலைவர்
அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் இன்றி
ஸ்கொட்லாந்தையும் பிரிட்டன் இழுத்துச் செல்வதாக அவர் காரணம் கூறியுள்ளார்.
வரும் 2018 கடைசி அல்லது 2019 ஆரம்பத்தில் சுதந்திரம் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகொலா ஸ்டர்ஜன் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது உறுதியாகும் பட்சத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கும் முக்கிய சட்டம் ஒன்றிற்கு பிரிட்டன் பாராளுமன்றம் தனது கடைசி ஒப்புதலை நேற்று முன்தினம் வழங்கிய நிலையிலேயே ஸ்கொட்லாந்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2014 செப்டெம்பரில் ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றபோது அதனை ஸ்கொட் மக்கள் 55–54 வாக்கு வித்தாயசத்தில் நிராகரித்தனர்.

0 Kommentare:
Kommentar veröffentlichen