தெளிவடைவதற்கு காலம் அவசியமில்லை..கவிஞை வாணமதி

பெண்ணாய் பிறந்தவள் தன்னைப்பற்றியும் ,தனக்கும் சமூகத்துக்குமான தற்கால நிலைபற்றியும் சிந்திக்கின்ற நாள்.
(எத்தனை பெண்கள் இந்த நாளிலேனும் சிந்தித்தார்களோ தெரியாது)
தெளிவடைவதற்கு காலம் அவசியமில்லை.
அதற்கான ஆர்வமும் ,செயலும் இருந்தால் போதும்.

பெண்கள் தமக்கான அளவீடாக ஆண்களுக்கு நிகரென எதை வரையறுத்துள்ளார்களோ தெரியாது.
ஆளுமையுள்ள பெண் சொல்லும் அளவீடு "உடலாலும் உளத்தாலும் எம்மை மிருகம் போல எண்ணாதீர்"
அவ்வளவுதான்!
நேற்றையநாளில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரி மானிலத்தின் பியுளாக் (Bülach)பகுதியில் மகளிர்தின சிறப்பு நிகழ்வுகள் மாலை 18:30-23:30 வரை இடம் பெற்றது.
பல்வேறு நாட்டைச்சேர்ந்த ஏறக்குறைய 150 பெண்களுக்கு மேலாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாடகம்,இசை நிகழ்ச்சி என்பவற்றுடன் இரவு விருந்தும் சிறப்பே!
"வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் கூடிய நகைப்பில் நகரவேண்டும்"என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு உரைகள் நிகழ்த்தப்பட்டது.
இரு தமிழ் பெண்களாக நானும் என் மகளும்.
"இவளும் பெண்ணே" என்ற தலைப்பில் ஒரு Power point காட்சிப்படுத்தினேன்.5-10 நிமிடம் தரபட்டபோதும் ஓர் தமிழச்சியாக ஓர் அடையாளப்படுத்தல்.
எனது மகள் அம்மு "நான்" என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினாள்.
கடந்த ஆறுவருடகாலமாக "கொக்தைல் குறுப்" எனும் மகளிர் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருக்கின்றேன்.
பல்வேறுபட்ட இனத்தவர்களுடன் இனைந்து செயல்படும் போது வெளிக்காற்றை சுவாசிக்கின்றோம்.
வெளிக்காற்று என்றும் ஆரோக்கியந்தானே!

0 Kommentare:

Kommentar veröffentlichen