கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மர்மம்!! பொதுமக்கள் அவலம்

பொறுப்புகளின் காத்திரத்தன்மையறியா சுயஇலாப் பச்சோந்திகளின் சோரம் போதலால் தொடர்ந்து மாற்றங்கள் ஏதும் பெறாத சுறண்டல்கள் நிறைந்த ஓர் அவல கிராமமாக எமது கிராமம்.

உருத்திரபுரம் மேற்குக் கிராமம் 50 வருடங்களுக்கு மேலாக உள்ளக கட்டுமானங்கள் ஏதுமில்லாது புறக்கணிக்கப்பட் கிராமமாக செழிப்பற்ற ஓர் சூனிய இருள் சூழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மனிதனது வாழிடத்துக்கு ஒப்பாக நிதர்சன அபாயம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது.

அண்மையில் சென்ற வருடத்திற்கான கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபாவில் மக்களின் தேவையை முதன்மைப்படுத்தி பாரிய அழிவைத்தரும் உருத்திரபுரம் மேற்கு 5ம் வீதிக்கு சமாந்தரமான கழிவாற்று அணை பாரிய அழுத்தங்கள் திசைதிருப்பல்களுக்கு மத்தியில் ஒருவாறு கழிவாற்று அணை கட்டி முடிக்கப்பட்டது.

இருந்தும் கடந்த 4 தசாப்தங்களாக இவ் நீர் வரத்தால் ஒவ்வொரு நாளும் இடர்படும் மக்களுக்கு மீண்டும் சோதனை வந்தது.
கடந்த தை மாத காலநிலை வரட்சி காரணமாக விவசாயிகள் கடும் நீரற்ற பிரச்சனையை எதிர் கொண்டபோது இரணைமடு நீரை கொண்டுவர போதாமையால் முறிப்புக்குளத்தின் 2 அடி நீரைப்பெறும் நோக்கில் விவசாயிகள் உத்தியை வகுத்து தங்கள் சுய தேவையை நிறைவேற்றிக்கொள்ள மாத்திரம் முனைந்தனர் . இதன் மூலம் கொண்டு செல்லப்பட்ட நீர் குஞ்சுப்பரந்தன் வரை கொண்டு செல்லப்பட்டது. இதற்கு நாட்டின் ஒட்டு மொத்த அவசர கால அனர்த்த முன்னெடுப்பாகையால் இப்பகுதி மக்கள் பேச்சிழந்து நின்றனர்.

இந்நிலையை சாதகமாக்கி நீர்ப்பாசன ,கமநல சேவை,மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் எமது மற்றும் அயல் பகுதி கிராம அபிவிருத்தி உறுப்பினர்களுடன் சேர்ந்து உருத்திரபுரம் 5ம் வீதியில் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் இடத்தில் மீண்டும் வீதிக்கு குறுக்காக பாரியளவில் அகழி தோண்டப்பட்டது.

தை மாதம் தோண்டப்பட்டது மக்கள் கேட்டார்கள் இதற்கான தீர்வு என்ன? சொன்னார்கள் 5,6 தினங்களுக்குள் இதை மீண்டும் கட்டி விடுவோம் சீரான மக்கள் பயன்பாட்டுக்கு சீமெண்டிலான வாய்க்காலை செய்து தருவோம். என்றார்கள் மக்கள் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார்கள்.
ஆனால் இன்று வரை யாரும் இது தொடர்பாக எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை? தம் தேவைகள் நிறைவேறி விட்டன அறுவடை நன்றாக பொலிந்த குதூகலத்தில் கிராம வளத்தையே நாசமாக்கிய வேலையை சீர்செய்ய தோன்றவில்லை? செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை .

இதற்கு பொறுப்பு நின்றவர்கள் சோரம் போன கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் நாக்கில் நரம்புமில்லை முதுகில் எலும்புமில்லா தம் சுய தேவையை மாத்திரம் கூத்தாடி பெற்றுக்கொண்டு மனித உருவில் நடமாடி திரின்ற ஜடங்களாக இவர்கள் இருக்கின்றார்கள்.

நேற்றைய தினம் பெய்த சிறு மழைக்கு அவ்வீதி முற்றாக மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் நீர் வீதிக்கு குறுக்காக இவர்கள் இரவோடு இரவாக வெட்டிய வாய்க்காலை நாலுமடங்கு இடித்தழித்தவாறு மண்ணைக் கொண்டு சென்று விட்டது. இந்நிலையில் கூட பொறுப்பெடுத்த பொறுப்பு நின்ற மனித ஜென்மங்களுக்கு அடுத்த மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கஸ்கரங்கள் கொஞ்சமும் அவர்கள் மனதில் கூட பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. வெறும் சுயலாப விரும்பிகள் தாமாக பொறுப்புகளில் உள்நுழைவதும் தமக்கேற்றவையிலும் தம் நெருங்கிய உறுவுகளுக்கான தேடலை பெருக்கிக்கொள்ள மாத்திரமே வாழுகின்றார்கள்.

இங்கே உள்ள கிராம தலைவர்களுக்கு ஒரு விடயம் புரிவதில்லை மக்களின் பிரச்சனைகளை தீர்கும் வகையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் மக்கள் தெரிவார்கள் நம்பிக்கையில், ஆனால் நடப்பதோ மாறாக தெரிவு செய்ப்பட்டவர்கள் மக்களின் பரச்சனைகளை வெளி மட்டங்களில் கொண்டு சென்று தீர்க்காது. அரச மட்டங்களினால் அமுல்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் மக்களிடையே திணிப்பவர்களாக மாறிவிடுகின்றார்கள். தெரிவு செய்தது மக்கள் தங்கள் பிரச்சனையை கொண்டு செல்ல ஆனால் நடப்பதோ வேறொன்று. இவ்வாறான பச்சோந்திகளும் சூறையாடிகளும் இருக்கும் வரை ஏழை என்றும் ஏழையாகவேதான் கிராமம் என்றும் சூனிய சுடுகாடேதான்.

மாற்றத்திற்காக உழைப்போம் பகிர்ந்திடுவீர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen