இராணுவம் உட்பட அரச படையினரை எந்தவொரு நிலையிலும் நீதிமன்றில் நிறுத்தி
தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சூளுரைத்திருக்கின்றார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் நாடு பிளவுபடுகின்றது, நாட்டைத் துண்டாடுகின்றனர், சிங்கள இனத்தை இல்லாதொழிக்கின்றனர் என்று பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு இன வாதத்தையும் மதவாதத்தையும் பரப்புவதன் ஊடாக அரசியலை செய்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் இவர்களே ஜெனீவாவிற்கு சென்று வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு வழக்குத் தொடர இணங்கியதுடன், அமெரிக்காவின் நியோர்க் நகருக்கு சென்று போர் குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் படையினருக்கு எதிராக வழக்குத் தொடர்வதாகவும் வாக்குறுதி அளித்தனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டின் மீதும் இராணுவம் உட்பட அரச படையினர் மீதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காரணமாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருந்த களங்கத்தையும் நெருக்கடிகளையும் அகற்றியுள்ளதாக அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டின் படையினரை எந்தவொரு நீதிமன்றிலும் நிறுத்த தமது அரசாங்கம் இடமளிக்காது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அனைவரையும் இணைத்துகொண்டு நாட்டிற்கு பொருத்தமான அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர், இதன்போது நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திலுள்ளவர்கள் நாட்டை பிரிப்பதற்கு சதி செய்வதாக சிலர் குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், ஆனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் மாத்திரமன்றி நாட்டின் தென்பகுதியிலுள்ள மாகாண சபைகளும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரிக்கும்படியே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen