முப்படைகள்மீது குற்றப்பத்திரிகை சுமத்தி அவர்களை விசாரணைக்குட்படுத்த
தாம் தயாரில்லையென்று ஜனாதிபதி சிறிசேன கூறுவதானதுஇ உள்நாட்டு போர்க்குற்ற
விசாரணைக்கே இடமில்லையென்பதை மறைபொருள் வடிவமாக அவர் வெளிப்படுத்துவதாக
அமைந்துள்ளது.
கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இடமில்லையென்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
மைத்திரி – ரணில் அரசின் உறுதியானதும் இறுதியானதுமான நிலைப்பாடு இதுவென்று அரசாங்க தரப்பின் பிரதம கொறடாவான பிரதியமைச்சர் அஜித் பெரேரா அறிவித்துள்ளார்.
கலப்புப் பொறிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இன்னொரு பிரதியமைச்சரான ஹர்ஷா டி சில்வா பொதுநிகழ்வுகளில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
கலப்பு நீதிப் பொறிமுறை சாத்தியப்படாது என்று சாத்தான் வேதம் ஓதுவதுபோல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தம் பங்குக்கு அறிவித்துள்ளார்.
கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமானால் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் ரணில் ஒரு முடிச்சுப் போட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வாரங்களாக கலப்பு நீதிப் பொறிமுறைக்கு எதிரான கருத்தை செல்லுமிடமெங்கும் வெளிப்படுத்தி வருவதை இங்கு கவனிக்க வேண்டும்.
ஆகஇ 2015 ஒக்டோபர் 1ம் திகதி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான ஓர் அம்சத்தை இலங்கை அரசு நிரந்தரமாக கிடப்புக்குள் போட்டுவிட்டது என்று துணிந்து சொல்லலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விருப்பமும் அக்கறையுமின்றி இதனை நிறைவேற்ற ஆதரவளித்த இலங்கை, இதற்கு மேலும் இரண்டு வருட அவகாசம் கேட்டுள்ளது.
முன்னைய தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்காவே காலநீடிப்புத் தீர்மானத்தையும் பிரேரித்துள்ளது.
பிரித்தானியா, வட அயர்லாந்து, மசிடோனியா, மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இதனைச் சமர்ப்பித்துள்ளன.
இத்தீர்மானத்தை அமுல்படுத்த காலஅட்டவணை வகுக்க வேண்டுமென சுவிற்சர்லாந்து கேட்டுள்ள போதிலும், இதற்கு யாரும் காது கொடுத்ததாகத் தெரியவில்லை.
இத்தீர்மானத்தை நிறைவேற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளும் கண்காணிப்பதற்கென ஐ.நா. அலுவலகம் ஒன்று சிறிலங்காவில் அமைக்கப்பட வேண்டுமென்று மனித உரிமை ஆணையாளர் சயித் அல் ஹ_சைன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வார இறுதியில் வவுனியாவில் கூடிய தமிழர் தேசிய கூட்டமைப்பும் இதனை ஒரு நிபந்தனையாக காலநீடிப்பு தீர்மான வரைபில் உள்ளடக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.
ஆனால்இ இந்த மாதம் 16ம் திகதி ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட காலநீடிப்புத் தீர்மானத்தில் இதுபற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னராக இதனை இணைத்துக் கொள்ளும் சாத்தியமும் காணப்படவில்லை.
கூட்டமைப்பின் கோரிக்கை எதனையும் உள்வாங்காததும், மாற்றம் எதுவும் செய்யப்படாமல் அடிப்படைத் தீர்மானமே முன்வைக்கப்பட்டிருப்பதும் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தைத் தருவது.
இப்போது நிகழும் 34வது அமர்வின் தீர்மானப் பெறுபேறுகளை 37வது அமர்வில் எழுத்து மூல அறிக்கையாகவும், 40வது அமர்வில் விரிவான அறிக்கையாகவும் மனித உரிமை ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டுமென இத்தீர்மானம் மேலும் கூறுகிறது.
தீர்மானம், கண்காணிப்பு அறிக்கை, காலநீடிப்புஇ மறுதீர்மானம், எழுத்துமூல அறிக்கை, விரிவான அறிக்கை என்று தொடர் நாடகமாக ஜெனிவா அரங்கு இழுபடுகிறதே தவிர, ஆரோக்கியமான செயற்பாடுகள் எதனையும் எந்தத் தரப்பிலும் காணமுடியவில்லை.
இலங்கையில் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகம் அமைக்க எச்சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்பட மாட்டாதென்ற மைத்திரி – ரணில் அரசின் முடிவை உறுதிப்படுத்துவதாகவே காலநீடிப்பு தீர்மான வரைபு காணப்படுகிறது.
ஆனால்இ ஜெனிவா பிரேரணையின் நம்பகத்தன்மையை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென்று மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டிருப்பது நகைப்புக்கு இடமாகவுள்ளது.
வேறுவழியின்றி காலநீடிப்புக்கு கூட்டமைப்பு சாட்டுக்கான நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்திருப்பதற்கு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது.
கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். காலநீடிப்புக்கு தனது உடன்பாடின்மையை உடனடியாகவே அறிவித்துவிட்டது.
மறுதரப்பில், தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதனைத் தமக்கு சாதகமான அரசியல் ஆயுதமாகவும் கையில் எடுத்துள்ளது.
கலப்பு நீதிமன்றப் பொறிமுறை, போர்க்குற்ற விசாரணை, ஐ.நா. கண்காணிப்பு அலுவலக உருவாக்கம் என்ற அனைத்தையுமே இலங்கை அரசு நிராகரித்த பின்னர், இணை அனுசரணை என்பதே அர்த்தமற்றதாகப் போய்விட்டது.
இதன்பின்னர் இதனை வாபஸ் பெறுவதற்கு என்ன இருக்கிறது?
இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத முதல் வாரத்தில் பலாலியில் வைத்து விடுத்த அறிவிப்பு அமைந்துள்ளது.
முப்படையினர்மீது குற்றப்பத்திரிகை சுமத்தி அவர்களை விசாரணைக்கு உட்படுத்த தாம் தயாரில்லையென்று பலாலி விமானப்படை முகாமில் வைத்து முப்படையினர் மற்றும் காவற்துறையினர் முன்னிலையில் இதனை அவர் அறிவித்தார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட கலப்பு நீதிப் பொறிமுறை விசாரணையை தாம் முற்றாக நிராகரித்துவிட்டதாகவும், தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தின் கௌரவத்துக்காக தமது பதவிக்காலத்தில் தாம் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் இங்கு தெரிவித்துள்ளார்.
படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவோ அல்லது தாஜா பண்ணவோ இவ்வாறு அவர் தெரிவித்திருக்கலாமென்று சொல்ல முடியாது.
போர்க்குற்றம் புரிந்த படையினருக்கு எந்தத் தண்டனையும் வழங்க அரசாங்கம் தயாரில்லையென்ற கொள்கை முடிவையே ஜெனிவாக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மிகத் துணிச்சலாக இவர் கூறியுள்ளார்.
போர்க்குற்ற விசாரணை என்றால் என்ன? பூரணமான விசாரணையின் பின்னர் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதே நல்லாட்சியின் நல்லம்சமாக இருக்க வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைக்கு இணைஅனுசரணை வழங்கி ஆண்டொன்று கழிந்தபின் படையினருக்கு எதிரான விசாரணைக்கு இடமில்லை என்பதன் மூலம், போர்க்குற்றவாளிகளின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு இங்கு புரிய வைக்கப்படுகிறது.
குற்றம் புரிந்தவர்கள் படையினர் என்பதால், அவர்கள்மீது விசாரணை நடத்தி அவர்களைத் தண்டிக்க தயாரில்லையென்பதை மைத்திரியின் கூற்று அச்சொட்டாக விளக்கி நிற்கிறது.
இப்படியாக இராணுவத்தைக் காப்பாற்ற முனைபவர், எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று மேடைகளில் நின்று மார்தட்டுவது கேவலமான கேலிக்குரியது.
இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லையென்றால் துணிந்து விசாரணை நடத்த முன்வர வேண்டும். கலப்பு நீதிப் பொறிமுறையை ஏற்க வேண்டும். ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகத்தை இலங்கையில் நிறுவ அனுமதிக்க வேண்டும்.
இவைகளை மறுத்தவாறு, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுவது, சர்வதேச விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார் என்பதையும் முப்படையினர் போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்பதையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

0 Kommentare:
Kommentar veröffentlichen