யாழ்
தீவகம் நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில், புதன் அதிகாலை பொதுமகன்
ஒருவர் வழங்கிய தகவலையடுத்து -பொலிசாருடன் கிராம அலுவலர்கள் சிலர் இணைந்து
பத்து கேரள கஞ்சாப்பொதிகளை மீட்டிருப்பதாக நயினாதீவிலிருந்து நிழற்பட
ஆதாரத்துடன் எம்.குமரன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட
பத்து கஞ்சாப்பொதிகளின் நிறை சுமார் 51 கிலோ வரை
இருப்பதாகவும்-ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக பொதிகள்
எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen