அவர்கள் இருவர். எப்பவுமே ஒன்றாகவே தேச விடுதலைக்காக பயணிப்பவர்கள்.
நான் சிறுவயதாக இருந்த போது தந்தையூடாக ஏற்பட்ட தனித்துவமான அக்கா தம்பி
உறவினூடாக நெருக்கமானவர்கள். நிசாந்தி என்றழைத்தால் இருவருமே பதிலுரைக்கும்
தொல்லையை தவிர்க்க சின்ன நிசாந்தி பெரியநிசாந்தி என்று அடை மொழி
பெற்றவர்கள்.
அவர்களை இறுதியாக மல்லாவி ICRC ஒழுங்கைக்குள் யாழ்செல்லும் படையணி மகளிர் தளபதி லெப். கேணல் தணிகைச் செல்வி அக்காவின் தாயார் சாவடைந்து மறு நாள் சந்திக்கிறேன். "என்ன அக்கா வீட்ட வராம இதுக்க சுத்திறாய் அம்மாட்ட போட்டுக்குடுக்கிறன் பாரு." டேய் கறுப்பா... அக்காட அம்மா செத்திட்டாவல்ல அதுக்கு வந்தனாங்களடா எல்லாரும் நிக்கும் போது எப்பிடி வாறது அம்மாவ கேட்டதென்று சொல்லு பிறகு வாறம் என்ன? சரி அக்கா நான் போகவா டியூசனுகெஉ நேரமாச்சு.. ஓடுடா கறுப்பா போய் கவனமா படி சரியா அதோட ஒவ்வொரு நாளும் பேப்பர் படி. ஏனக்கா? சொன்னதை செய் கறுப்பா... என்று சின்ன நிசாந்தி மிரட்ட பெரிய நிசாந்தி தம்பி பேப்பரில உன்ட அக்காக்கள் வருவம்டா ... கட்டாயம் பார் சரியா என்று சிரித்துக் கொண்டாள். சீ போங்கோடி லூசுகள் உங்கள அம்மாட்ட போட்டுக்குடுக்கிறன் பாருங்கோ... நான் அவர்களிடம் கோவப்பட்டு அவர்களிடமிருந்து பிரிந்த போது நினைக்கவில்லை அவர்கள் சொன்னதைப்போல ஈழநாதம் பத்திரிகை செய்தியில் வருவார்கள் என்று. தம்பி டேய் நில்லுடா யாரோ ஒருத்தி என் பின்னால் ஓடி வந்த போதும் நான் அவர்களை திரும்பி பார்க்காது சென்றுவிட்டேன்.
இப்போது அடிக்கடி நினைப்பேன் உயிருக்குயிராக தம்பி என்று அன்போடு அழைத்தவளை ஒரு தடவை கூட திரும்பி பார்க்காது கோவப்பட்டு இறுதிவரை அவள் முகத்தை பார்க்க முடியாமலே போய்விட்டதே. அப்போதெல்லாம் அவர்கள் சாவு என்பதை கண்முன்னே கண்டாலும் புன்னகை புரியும் வீராங்கனைகள் என்பதை நான் அறிந்தாலும் அவர்களின் செயற்பாடுகள், தாக்குதல் திறன்கள், சாதனைகள் என்று எதையும் அறிந்ததில்லை.
ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்படைப்பாளி தமிழ்க்கவி அவர்களின் யாழ்செல்லும் படையணியின் சாதனைக் கதை சொல்லும் "" என்ற நாவலூடாக இவ்விரு அக்காக்களையும் முழுமையாக இல்லாது விடினும் சிலவற்றையாவது அறிந்து கொண்டேன்.
தேசத் துரோகி ஒருவனுடன் வீட்டுக்குள் ஒருத்தியாக நெருங்கி வந்து அவனின் வீட்டையே தாக்குதல் நடவடிக்கைகளுக்கான வேவுத்தளமாக்கியதும், தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்ததும், அதை மழை வந்து குழப்பியதும், அதனூடாக அந்த துரோகிமூலம் கிடைத்த தகவலை அடிப்படையாக்கி சிங்கள இராணுவம் கிளைமோரை கைப்பற்றியதும், வெடி பொருள் இழப்புக்காக பாரிய விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது தவறுக்கான தண்டனை பெற்று மீண்டும் சாதனையாளியாய் சண்டையிட்டது என சின்ன நிசாந்தி யாழ்ப்பாணத்தில் தனது போரியலாற்றலை வெளிப்படுத்திய போது...
சின்ன பெண் ஒருத்தி அதுவும் அழகான பெண் ஒருத்தி தம்முடன் நெருங்கி பழகும் போது வாயை இழித்து கொண்டு நின்ற படைச்சிப்பாய்களுக்கு கேக் பார்சலுக்குள் செய்யப்பட்டிருந்த பொறிவெடியை." சேர் இன்று எனக்கு பேத்டே அதுதான் கேக் கொண்டு வந்தனான். கேக் சாப்பிடுங்க சேர்" என்று கொடுத்துவிட்டு சென்ற போது அந்த காவலரணில் நின்ற இரு இராணுவம் கேக்குக்காக தம் உயிரை விட்டதும். அந்த வெற்றியின் பெருமிதம் எதுவும் அற்று அடுத்த இலக்கினை நோக்கி சென்ற பெரிய நிசாந்தி என பல வரலாற்றுகளை எழுதி நின்றார்கள் எம் அக்காக்கள்.
இவ்வாறான சண்டைகளின் வெற்றிச்செய்திகள் ஈழநாதத்தில் வந்த போது... யார் செய்தது என்று தெரியாமலே மகிழ்ந்த நாட்கள் நகர்ந்து ஒரு நாள் அந்த செய்தி என் விழியில் இருந்து கண்ணீர் வர வைத்தது. அந்த கண்ணீர் அடங்க முன் கொஞ்ச நாள் கழித்து மறு செய்தி. விடுதலை சுமந்த வேலகைகள் மரிப்பது ஒன்றும் புதிதல்ல ஆனால் இன்னும் சாதிக்க வேண்டியவர்கள் துரோகிகளால் இனங்காட்டப்பட்டதை ஏற்றுக் கொள்ள நெஞ்சம் மறுக்கிறது.
வீட்டில் இருந்து வெளி வருகிறேன் ICRC ஒழுங்கையுனுள் செல்கிறேன் நிசாந்திகளை இறுதியாக கண்ட இடத்தில் நிற்கிறேன். தம்பி பேப்பர தினமும் படி... ஏனக்கா? சொன்னத செய்டா கறுப்பா... போங்கோடி லூசுகள்.... தம்பீ டேய் நில்லுடா தம்பி... இன்றும் அந்த குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

0 Kommentare:
Kommentar veröffentlichen