புலம்பெயர்வுகள் காரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்
முஸ்லிம்களின் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில் 53 வருட காலப்
பகுதியில் உலக சனத்தொகையில் முஸ்லிம்களின் தொகையானது
கிறிஸ்தவர்களின் தொகையை விஞ்சும் என அமெரிக்க வாஷிங்டனை
அடிப்படையாகக்கொண்டு செயற்படும் பியூ ஆராய்ச்சி நிலையம்
தெரிவிக்கிறது.
உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் முஸ்லிம்களின் சனத்தொகை 2010 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது. இது உலக மொத்த சனத்தொகையின் சுமார் 23 சதவீதமாகும். ஆனால் இந்த தொகை கிறிஸ்தவர்களின் தொகையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.2 பில்லியனால் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏனைய மதத்தவர்களை விடவும் முஸ்லிம்களின் இன விருத்தி விகிதாசாரம் அதிகமாகவுள்ளதால் அவர்களின் சனத்தொகை மென்மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக மேற்படி ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.
முஸ்லிம் பெண்கள் சாராசரியாக 3.1 பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாக தரவுகள் கூறுகின்ற நிலையில், ஏனைய அனைத்து மத குழுக்களைச் சேர்ந்த பெண்களும் சராசரியாக 2.3 பிள்ளைகளையே பெற்றுக் கொள்கின்றனர்.
உலகில் 62 சதவீதமான முஸ்லிம்கள் ஆசியபசுபிக் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். அவர்களில் பெருமளவானோர் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகையில் அதிகளவு முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என மேற்படி ஆய்வு எதிர்வுகூறுகிறது.
கடந்த வருடம் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் முஸ்லிம்களின் தொகை 3.3 மில்லியனாக இருந்தது. இது அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும். இந்த சதவீதம் 2050 ஆம் ஆண்டில் 2.1 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2100 ஆம் ஆண்டில் உலக மொத்த சனத்தொகையில் கிறிஸ்த வர்களை விடவும் முஸ்லிம்கள் ஒரு சதவீதத்தால் அதிகமாக இருப்பார்கள் என பியூ ஆராய்ச்சி நிலை யத்தின் இந்த பிந்திய ஆய்வு கூறுகிறது.

0 Kommentare:
Kommentar veröffentlichen