இன்று நடந்த கொடூர விபத்தில் தந்தை மகள் பலி

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை, மகள்ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகரை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த அப்பா (வயது 56) மற்றும் மகள் (வயது 19 திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவி) சம்பவ இடத்திலையே பலியானதுடன்,

தாயாரான திருகோணமலை-பாலையூற்று பகுதியைச்சேர்ந்த செறின் எடன் (54வயது) திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்



0 Kommentare:

Kommentar veröffentlichen