‘உங்கள் ஜனாதிபதியை நம்பி நாசமாய் போனோம்!’ யாழில் கொந்தளித்த சிவாஜி!!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்காமல் சென்றதால் வடமாகாண முதலமைச்சர் உட்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

வீதி வழியே பேரணியாக சென்றபோது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என யாழ் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாகாண சபை உறுப்பினர் “உங்கள் ஜனாதிபதியை நம்பி நாசமாய் போனோம்” என தெரிவித்து நடு வீதியில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen