ஜெனிவா திருவிழா தொடங்கியுள்ளதால்
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு குறித்து ஆங்காங்கு கதை கிளம்புது. நல்ல விடயம்.
அதற்கு முன்பாக வாக்களிக்க தாயகத்தில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டும்: என்ற ஒரு மேற்றர் இருக்கிறது. அதற்கு முதல் வழி ஏற்படுத்திவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் பொது வாக்கெடுப்பு குறித்து பேசுவது நல்லது.
01. தாயகத்தில் தினமும் குறைந்தது 10 பேர் ஏன் சாகிறார்கள்? எதற்கு சாகிறார்கள்? என்று தெரியாமல் சாகிறார்கள்.
02. விதவைகள், அரை விதவைகள் மறுமணம் செய்யாமல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என்ற நிலை தொடர்வதால் கருவளம் வீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
03. மணமுறிவு, திருமண தடை என்பவை பல்கி பெருகுகின்றன.
04. இனஅழிப்புக்கு முகம் கொடுத்ததால் அதன் விளைவான உடற் தாக்கங்களினால் பெண்களின் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
05. இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்ததனால் கருச்சிதைவு அல்லது சிசு மரண வீதம் அதிகரிப்பு.
06 மிக வேகமாக தொடரும் சிங்கள குடியேற்றங்கள்.
07. இறுதி இனஅழிப்பின் விளைவாக அனாதைகள் அல்லது பொறுப்பான கண்காணிப்பு இல்லாத சிறுவர்கள் பல்கி பெருகியுள்ளதால் குற்ற சமூகம், வன்முiறை சமூகம் அல்லது சீரற்ற ஒரு குடும்ப அமைப்பு இனஅழிப்பு அரசால் நுட்பமாக பேணப்படுவதால் ‘பொறுப்பற்ற’ அல்லது “தாயக சிந்தனையற்ற” ஒரு தலைமுறை உருவாக்கம்.
இப்படி பட்டியல் போட்டால் இன்று நாள் முழுக்க போட்டுக் கொண்டேயிருக்கலாம்.
இதெல்லாம் கூட்டாக தாயகத்தில் எமது இனப்பரம்பலை எப்படி கட்டுப்படுத்தும் என்பதை தனியாக வேறு விளக்க வேண்டுமா?
இதை எல்லாம் மாற்றியமைக்காமல் விட்டுவிட்டு பொதுவாக்கெடுப்பு கேட்டால் குறிப்பான ஒரு 10 வருடத்தில் சிங்களம் தானே வலிய ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தும்.
அப்போது இரோம் சர்மிளாவின் ரெக்கோட் தமிழீழத்தில் உடைக்கப்பட்டிருக்கும்.
அப்போது சமூக வலைத்தளங்களிலிருந்து மக்கள் மீது குற்றம் சுமத்த போகிறோமா?
முதலில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்வினையாற்ற ஒன்று திரள்வோம். பிறகு பொது வாக்கெடுப்பு கோருவோம்.

0 Kommentare:
Kommentar veröffentlichen