மணிக்கு 6,300 கிமீ வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் போர் விமானத்தை
அமெரிக்க ராணுவம் உருவாக்கி வருகிறது. எக்ஸ்- 51ஏ வேவ் ரைடர் என்ற பெயரில்
அழைக்கப்படும் இந்த விமானத்தின் புரோட்டோடைப் மாடல் ஒன்றை தயாரித்து
சோதித்து பார்க்கப்பட்டது.
அதில், வெற்றி கிட்டியிருப்பதால், முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மாடலை தற்போது அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
திட்ட மதிப்பீடு
கடந்த 2004ம் ஆண்டு 300 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த புதிய ஹைப்பர்சானிக் போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்கா கையிலெடுத்தது. பல கட்ட ஆய்வுகளுக்கு பின் உருவாக்கப்பட்ட முதல் புரோட்டோடைப் விமானம் கடந்த 2013ம் ஆண்டு பறக்கவிட்டு சோதனை
சோதனை வெற்றி
2013ம் ஆண்டு மே 1ந் தேதி ஆளில்லாமல் அந்த முதல் புரோட்டோடைப் விமானத்தை போயிங் பி52எச் ஸ்ட்ரேட்டோஃபோர்ட்ரெஸ் என்ற குண்டு வீச்சு விமானத்தின் மூலம் எடுத்துச் சென்று 50,000 அடி உயரத்தில் வைத்து பசிபிக் பெருங்கடல் மேலே செலுத்தி சோதனை செய்தனர்.
வேகம்
வெறும் 6 நிமிடங்களில் மேக் 5.1 என்ற வேக அளவுகோலை அந்த விமானம். அதாவது, ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் பறந்து தனது இலக்கை எட்டிய அந்த விமானம், பசிபிக் பெருங்கடலில் விழ செய்யப்பட்டது. அதற்கு தக்கவாறே எரிபொருளும் நிரப்பப்பட்டிருந்தது.
புதிய விமானம்
இதைத்தொடர்ந்து, எக்ஸ்- 51ஏ வேவ் ரைடர் விமான திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய ஹைப்பர்சானிக் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் ஈடுபட்டிருக்கிறது. இந்த விமானம் மணிக்கு 6,300 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும்.
ஸ்க்ராம்ஜெட் எஞ்சின்
ஸ்க்ராம்ஜெட் என்ற நவீன ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். திரவ ஹைட்ரஜன் மற்றும் வளி மண்டல ஆக்சிஜன் கலவையில் இந்த எஞ்சின் இயங்கும். ஆனால், இந்த எஞ்சின் பொருத்தப்படும் விமானங்களின் வடிவமைப்பு மிகவும் நுட்பமானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், எளிதாக வெடிக்கவும், தீப்பற்றும் ஆபத்தும் அதிகம்.
ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் திறன்
ஸ்க்ராம்ஜெட் எஞ்சின்கள் மூலமாக ஹைப்பர்சானிக் விமானங்களை மணிக்கு 8,400 கிமீ வேகம் முதல் 25,000 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். அதாவது, மேக் 12 முதல் மேக் 24 வரையிலான வேக அளவுகோலில் இயக்க முடியும்.
பயன்பாடு
வரும் 2023ம் ஆண்டு புதிய ஹைப்பர்சானிக் போர் விமானங்கள் அமெரிக்க ராணுவத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்படப்பட்டுள்ளது.

0 Kommentare:
Kommentar veröffentlichen