ஜேர்மனி Duisburgவங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ஊழியர்களை சிறை பிடித்ததகவல்கள்

ஜேர்மனி நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் ஊழியர்களை சிறை பிடித்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஜேர்மனியில் உள்ள Duisburg நகரில் Sparkasse என்ற வங்கி இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த வங்கிக்குள் சற்று முன்னர் தூப்பாக்கி ஏந்திய சிலர் நுழைந்துள்ளதாகவும், அங்குள்ள ஊழியர்களை தற்போது சிறை பிடித்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இத்தகவலை உறுதிப்படித்தியுள்ள பொலிசார் வங்கியை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கி ஊழியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen