கேப்பாப்பிலவு போராட்டம்; இராணுவம் வழக்கு தாக்கல்

கேப்பாப்பிலவு பூர்விக கிராமத்தில் கடந்த 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப முயற்சித்து வரும் இராணுவத்தினர் தமது அமைதிக்கு இடையூறு என கூறி பொலிஸாரையும் இணைத்துக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாப்பிலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங் களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி  தொடக்கம் நேற்று வரை 14வது  நாளாக போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் சந்தித்து கலந்துரையாடினார் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே. அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
 
கேப்பாப்பிலவு மக்கள் தமது வாழ்விடத்தையும் வாழ்வியலையும் மீட்டுக்கொள்வதற்காக 14ஆவது நாளாகவும் போராடிவருகின்றனர் அவர்களின் அகிம்சை ரீதியான அமைதியான போராட்டத்துக்கு எதிராக இராணுவம் இன்று நீதிமன்றை நாடியுள்ளதாக அறிகிறோம்.
 
எமது கேப்பாப்பிலவு புதுக்குடியிருப்பு வீதியை பலாத்காரமாக மறித்து வைத்திருக்கும் இராணுவத்தின் செயல் சரியா அல்லது எமது மக்களின் வாழ்விடங்களை பறித்து வைத்திருக்கும் இராணுவத்தின் செயல் சரியா  என்பதற்கான நீதி நாளை(இன்று) முல லைத்தீவு மாவட்ட  நீதிமன்றில் வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம் நிச்சயமாக நீதி வெல்லும் இந்த மக்களுக்கான நீதி நிலை நாட்டப்படவேண்டும் இந்த இராணுவம் எமது பாதையில் இருந்து விலகி எமது பாதை உட னடியாக திறந்துவிடப்படவேண்டும் மக்களின் வாழ்விடங்களை விட்டு இந்த ராணுவம் வெளியேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
 
14ஆவது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தில் தம்முடைய பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்ட மக்கள் தமது காணிக்குள் செல்லாது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவிக்கின்றனர்.
 
கேப்பாப்பிலவு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் மக்கள்  பெற்றுக்கொண்டனர்  இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு  மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தமக்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக  நவீன கமரா ஒன்றை இரகசியமாக பொருத்தி மக்களை ஒளிப்பதிவு செய்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen