ஈழத்தமிழர்களின்_வாழ்வை கேள்விக்குறியாக்கும்_கூட்டமைப்பினர்...!

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு தமிழினத்தை அழித்த சிங்களவனிடம் தமக்கு பாதுகாப்பு தேடும் கூட்டமைப்பினரின் ஈனச்செயலை என்னவென்று சொல்வது.
முன்னார் போராளிகள் பலர் சிறைகளில் சித்திரவதைகளுக்கு மத்தியில் வாடுகின்ற போதிலும் சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்ட
நிலையின் தமது வாழ்வை கேள்விக்குறியாக்கி கண்ணீரோடு வாழ்வை நகர்த்திவருகின்றனர்.

சிறையில் இருக்கும் எமது போராளிகளை விடுதலை செய்யக்கோரியும் போராடிவருகின்றனர் எமது மக்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை அழைக்கும் கூட்டமைப்பினர் தமது உயிருக்கு ஆபத்து என புரளியைக்கிளப்பி மீண்டும் இவர்களை கைது செய்யும் நோக்குடன் செயல்படுவது வேதனையை அளிக்கின்றது.
தமிழ் மக்களால் ஆபத்தாம் தமிழர்களை அழித்த பயங்கரவாத சிங்களப்படை பாதுகாப்பு வேண்டுமாம் இதெல்லாம் ஈழத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம் என்று போடும் நாடகங்களே என்பதை நாம் இங்கு உணரவேண்டும்.
இவர்களின் செயல்பாடுகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிராகவே இருக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பதை சிங்கள தேசியக்கூட்டமைப்பு என்று மாற்றி செயல்படுங்கள் ஈனர்களே அதுவே உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும்.
எமது மக்களின் கண்ணீர் ஒருபோதும் உங்களை சும்மாவிடாது ஈனக்கூட்டமைப்பே.
திருந்துங்கள் இல்லையென்றால் ஒழித்துநாசமாப்போங்கள்.


0 Kommentare:

Kommentar veröffentlichen