புதிய பிரே­ர­ணையை ஏற்றுக் கொண்டால் இலங்கை சர்­வ­தேச பொறியில் சிக்­கி­விடும்

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இம்­முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் ஒரு­ போதும் அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது. அவ்  வாறு வழங்­கினால் மீண்டும் இரண்டு வரு­டங்­  க­ளுக்கு சர்­வ­தே­சத்தின் பொறியில் இலங்கை சிக்­கி­விடும். எனவே , அர­சாங்கம் இந்த விட­யத்தில் இப்­போ­தா­வது புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்டும் என்று கூட்டு எதி­ர­ணி யின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

2015 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­ய­தா­லேயே 18 மாதங்கள் சர்­வ­தே­சத்­தி­னதும் ஐ.நா.வினதும் பொறியில் இலங்கை சிக்­கி­யது. இம்­மாதம் 31 ஆம் திக­தி­யுடன் இலங்கை அதி­லி­ருந்து விடு­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் சர்­வ­தேசம் மீண்டும் ஒரு பிரே­ர­ணையைக் கொண்­டு­வந்து இலங்­கையை மற்­று­மொரு பொறியில் சிக்க வைக்கும் முயற்­சியை முன்­னெ­டுக்­கப்­போகும் நிலையில் அர­சாங்கம் அதிலும் சிக்­கி­வி­டக்­கூ­டாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை நிரா­க­ரிக்கும் நிலையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான பரிந்­துரை உள்­ள­டங்­கிய ஜெனிவா பிரே­ர­னைக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எவ்­வாறு அனு­ச­ரணை வழங்­கினார் என்­பது புதி­ராக உள்­ளது. அதே தவறை வெளி­வி­வ­கார அமைச்சர் இம்­மு­றையும் செய்­யத்­து­டிப்­பது தெளி­வா­கின்­றது என்றும் கூட்டு எதி­ர­ணியின் தலைவர் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்கும் வகையில் அடுத்­த­வாரம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நிலையில் அதற்கு அனு­ச­ரணை வழங்­கு­வ­தாக இலங்கை தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் வின­வி­வ­ய­போதே கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:- புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணைக்கு யாரும் எதிர்­பார்க்­காத வகையில் இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யது.

பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த பார­தூ­ர­மான பரிந்­து­ரைகள் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அதற்கு அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்தார். அதன்­படி 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திக­தி­வரை சர்­வ­தே­சத்­தி­னதும் ஐ.நா.வினதும் பொறிக்குள் இலங்கை சிக்­கி­யி­ருந்­தது.
அந்தப் பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான பரிந்­துரை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார். அதன்­பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணையில் பங்­கேற்­பது சாத்­தி­ய­மற்­றது என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆனால் இந்த விட­யத்தை எமது கூட்டு எதி­ர­ணி­யா­னது 18 மாதங்­க­ளுக்கு முன்­னரே கூறி­விட்­டது என்­ப­தனை இங்கு சுட்­டிக்­காட்­ட­வேண்டும்.
இவ்­வாறு அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ரத்தை நிரா­க­ரித்­துள்ள நிலையில் அவ்­வா­றான பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கி­யுள்ள பிரே­ர­ணைக்கு 2015 ஆம் ஆண்டு அமைச்சர் மங்­கள சம­ர­வீர எவ்­வாறு அனு­ச­ரணை வழங்க முடியும்? இது தொடர்பில் அர­சாங்கம் ஆரா­ய­வேண்டும்.
அது­மட்­டு­மன்றி இவ்­வ­ருடம் மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் 2015 ஆம் ஆண்­டுக்­கான பிரே­ரணை காலா­வ­தி­யா­கின்­றது. அதன்­பின்னர் இந்தப் பிரே­ரணை தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இவ்­வாறு ஜெனிவா பொறி­யி­லி­ருந்து வெளியில் வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் வந்­துள்ள நிலையில் அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் மீண்­டு­மொ­ரு­முறை இலங்கை தொடர்பில் பிரே­ர­ணை­யொன்றை ஜெனி­வாவில் கொண்­டு­வ­ர­வுள்­ளன.
அந்தப் பிரே­ர­ணை­யா­னது 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் நீடிப்­பா­கவே அமை­யப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது. அதா­வது 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு மார்ச் 31 ஆம் திக­தி­வரை இலங்­கையை சர்­வ­தேச பொறிக்குள் சிக்க வைத்­தி­ருந்­ததைப் போன்று மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு இலங்­கையை மற்­று­மொரு பொறிக்குள் சிக்­க­வைக்­கவே அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் ஜெனி­வாவில் முயற்­சிக்­கின்­றன.

எனவே அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை ஒரு­போதும் அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது. ஆனால் தற்­போது எமக்கு கிடைக்­கின்ற தக­வல்­களைப் பார்க்கும் போது இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணைக்கும் வெளி­வி­வ­கார அமைச்சு இணை அனு­ச­ரணை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இவ்­வாறு அர­சாங்கம் புதிய பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கு­மாயின் அது­வொரு தாண்­தோன்­றித்­த­ன­மான முடி­வா­கவே அமையும். ஜெனி­வா­வி­னதும், சர்­வ­தே­சத்­தி­னதும் பொறி­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்தும் அதனை தகர்த்­து­விட்டு மீண்டும் ஒரு­முறை பொறிக்குள் சிக்­கி­விட இலங்கை அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எமக்கு ஏற்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணிலும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற விட­யத்தை நிரா­க­ரித்­துள்ள நிலையில் அவ்­வா­றா­ன­தொரு பரிந்­துரை இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற புதிய பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் எந்­த­வ­கை­யிலும் அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது.
ஒரு­வேளை புதிய பிரே­ர­ணைக்கு ஜெனி­வாவில் அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கு­மாயின் அது அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு இலங்­கையை சர்­வ­தேச பொறிக்குள் சிக்­க­வைப்­ப­தாக அமைந்­து­விடும். இது தொடர்பில் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை வழங்­க­வேண்டும்.

கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நிராகரிக்கின்றது. அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாடு இருக்கின்றது. அரசாங்கம் உரிய முறையில் உறுப்புநாடுகள் மத்தியில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் புதிய பிரேரணையை தோற்கடிக்கவும் முடியும்.

காரணம் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான்போன்ற நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால் இலங்கையானது பிரேரணையை நிராகரிப்பதுடன் அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தானாகவே சென்று பொறிக்குள் சிக்கிவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தவிடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆழமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen