இனத்துக்கான_நீதிக்காக_சர்வதேசத்தின் #மனச்சாட்சியைத்_தட்டியெழுப்புவோம்..!!!


உலகமெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் மிகவும் முக்கியமான வேளையில் அன்பான அறைகூவல் அழைப்பு!
இனத்துக்கான நீதிக்காக சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவோம்!

பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பல கொடுமைகளை புரிந்து வந்துள்ளது. அகிம்சை ரீதியில் போராடிய எம்மக்களை பல வன்முறைகளை புரிந்து அடக்கியது.

திட்டமிட்டு எம்மக்களை அழித்தும் , பாலியல் வன்புணர்வுகளை மேற்கொண்டும், தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியும், சேதப்படுத்தியும் , கல்வி வரலாற்று நூலகத்தை அழித்தும், திடடமிட்ட ரீதியில் தமிழ் தொடர் பிரதேசங்களை ஊடறுத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் காலம் காலமாக எம்மக்களை அழித்தும் வந்துள்ளது.
தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்த போது, தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதாக கூறிய இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளின் ஆதரவுடன் எம்மக்களை தடைசெய்யப்பட்ட மற்றும் கனரக ஆயுதங்களை பாவித்து கொன்று குவித்தது.
ஐ.நா, மனிதஉரிமைகள் அமைப்புக்கள் மற்றும் உலகநாடுகள் இவற்றையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. எம்மக்களின் துன்பங்களை, உயிரிழப்புக்களை வெறும் செய்திகளாகவும் சம்பவங்களாகவும் பார்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர எம்மக்களின் உணர்வுகளுக்கும் நீதிக்கும் எந்த சந்தர்ப்பங்களிலும் மதிப்புக்கொடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களையும் வெளிநாடுகளையும் காலங்காலமாக ஏமாற்றியே வந்துள்ளது. யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளைவில்லை.
தற்பொழுது ஜெனீவாவில் நடக்கும் ஐ. நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தமிழர் பிரச்சனை தீர்ப்பதற்கு மேலும் இரண்டு வருடங்கள் காலநீடிப்பை வழங்கப்பட்டுள்ளது .
இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும், அதிர்சியையும் தருகிறது.

இலங்கை அரசாங்கம் வழமைபோல இத காலநீடிப்பை பயன்படுத்தி தமிழர் பிரச்சனைகளை, ஆறப்போடவும், நீர்த்துப்போகச்செய்யவும் பயன்படுத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட் ட கால அவகாசங்களை சிங்கள அரசாங்கம் இவ்வாறே பயன்பத்தியது. தற்பொழுது கூட நல்லாட்சி அரசாங்கம் என கூறித் தமிழரின் வாக்குகளோடு ஆட்சியேறிய சிங்கள அரசு தமிழ் பிரதேசங்கள் எங்கும் இராணுவத்தினரை குவித்தும் , தமிழர் காணிகளை அபகரித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விசாரணைகள் இன்றி தடுத்துவைத்தும், காணாமல் போனவர்கள்போனவர்கள் மற்றும் போர்குற்ற விசாரணைகள் எதையுமே மேற்கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்து தமிழர்களையும் வெளிநாடுகளையும் ஏமாறிக்கொண்டிருக்கிறது.

எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் வெறுமனே இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இனமல்ல என்பதை சிங்கள அரசிற்கும் உலகநாடுகளுக்கு எடுத்துரைக்கும் கட்டாயத்திற்குள்/ சந்தர்ப்பத்திற்குள் வந்திருக்கிறோம்.

எனவே வருகின்ற 20ம் திகதியில் இருந்து குறிப்பிட்ட சில நாட்களுக்கு உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அந்தந்த நாட் டின் பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைதியான முறைகள் கூடி இந்த காலநீட்டிப்பு வழங்கப்படடதற்கு எங்கள் கவலையையும் அதிர்ப்த்தியையும் வெளிப்படுத்துவதோடு, இந்த இரண்டுவருட காலத்தில் இலங்கை அரசாங்கம் செய்துமுடிப்போம் என்று உத்தரவாதம் அளித்த அனைத்து விடயங்களையும் உரிய காலக்கிரமத்தில் செய்து முடிப்பதை ஐ. நா மனிதஉரிமை அமைப்புக்களும் வெளிநாடுகளின் உத்தியோகத்தர்களும் நேரடியாக கண்காணித்து, அவற்றின்

முன்னேற்றங்களை தமிழ் மக்களுக்கு அறியத்தரவேண்டும் என்று கேட்டு,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றிற்கான விசாரணைகளில் முற்றுமுழுதான வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னமும் , சுயாதீனத்தன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,

எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்கவும் ஒன்றுகூடுவோம்.
இந்தக் கோரிக்கையை எமது இனத்தின் அழிவை அவலத்தை உயிர் காக்கும் பணிகளின்போது நேரடியாக கண்ட கவலையாடும் மன அழுத்தத்தோடும் உங்களிடம் முன்வைக்கின்றேன்!
(பதிவு :டாக். து. வரதராஜா)

0 Kommentare:

Kommentar veröffentlichen