சென்னையில், இலங்கை கடற்படையைக் கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட
முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிசார் இன்று
(திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் இந்திய மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில், தமிழக மீனவரை படுகொலை செய்த இலங்கை கடற்படையை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர், சீமான் தலைமையில் மேற்படி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், நுற்றுக்கணக்கானோர் இலங்கை கடற்படையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போதே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடந்த 6 நாட்களாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவினது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் தலையிட்டு உறுதிமொழி வழங்கியதையடுத்தே நேற்றையதினம் அவரது உடலைப் பெற்றுக் கொள்வதற்கு பிரிட்ஜோவினது உறவினர்கள் சம்மதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:
Kommentar veröffentlichen