தமிழ் புலிகள் கட்சி,ஜனநாயகப் போராளிகள் கட்சி ஈழத்தில் தேவைதானா…? கட்சிகள் உங்களது தனிப்பட்ட நிலைப்பாடு.. ஆனால் புலிகள் என்ற பெயர் தேவைதானா??
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களாகிய உங்களில் சிலர் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நன்மதிப்பை செயலிழக்கச்செய்யும் ஒரு மதிகெட்ட நடவடிக்கையாகவே தாயகத்தில் இலங்கை அரசின் அரசியல் சூதாட்டத்துக்குள் தம்மையும் இணைத்து அவர்களின் சீழ்படிந்த அரசியல் வட்டத்துக்குள் தாமும் உட்செல்ல முயற்சிப்பதானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாகவே எம்மால் நோக்கப்படுகின்றது.
இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் வட்டத்துக்குள் தமிழர்களாகிய நாமும் இணைந்து எமது இனத்திற்காக நாம் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு சமத்துவமான ஜனநாயக பண்புகள் அந்நேரம் சிங்களத்திடம் இருந்திருந்தால் எதற்காக நாம் ஆயுதம் ஏந்தி சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடவேண்டும்?
மேலும் அந்நேரம் எமது அரசியல் தலைமைகளின் ஊடாக சிங்களவர்களுக்கு சமமான அதிகாரங்களை நாம் பெறமுற்பட்டபொழுதுதான் எமது அரசியல்வாதிகள் அனைவரும் சிங்களத்தின் ஆயுத அதிகாரம்கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட வலுவான படிப்பினைகளை எமது போராளிகள் தாம் தெரிந்திருந்தும் எதற்காக மீண்டும் ஒரு விஷப்பரீட்சையை தாமும் செய்துபார்க்க முயற்சிக்கவேண்டும்?
எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளாக நீங்கள் ஆயுதம் தரித்து போராடிவிட்டு இன்று உங்கள் கடந்தகால தியாகங்களை மறந்து இலங்கை சிங்கள அரசின் கேடுகெட்ட அரசியல் கோட்டைக்குள் உங்களையும் உள்நுழைக்க நீங்கள் முயற்சிப்பதானது எமது இயக்கத்திற்கும், மாவீரர்களுக்கும், அதன்பால் மரணித்த எமது பொதுமக்களுக்கும் நீங்கள் செய்யும் பாரிய துரோகமாகும்.
உண்மையில் எமது தேசியத் தலைவர் அவர்களின் அடிப்படை கொள்கைகளை கடந்த 2009ம் ஆண்டிற்கு பின்னர் உங்களில் சிலர் மறந்துவிட்டதன் வெளிப்பாடுகளே உங்களின் புதிய புதிய கட்சிகளின் இன்றைய அறிமுகங்களுக்கான அடிப்படை காரணம் என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகின்றது.
மேலும் உங்கள் புதிய புதிய கட்சிகளின் உருவாக்கத்திற்காக நீங்கள் கூறமுற்படும் அபத்தமான கருத்துக்களை ஒருபோதும் எமது போராளிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதையும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சிலரது தூரநோக்கற்ற சிந்தனைகளுக்காக ஒட்டுமொத்த எமது புனிதமான அமைப்பின் பெயர்களை தன்னிச்சையாகவும்,தவறாகவும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என உச்சரித்து எமது இயக்கத்தின் கொள்கைகளை சிதறடிக்க நீங்கள் முற்பட்டால், இலங்கை அரசிடம் விலைபோன கைக்கூலிகளாகவே உங்கள் சிலரையும் நாம் நோக்கவேண்டிய துற்பாக்கிய நிலைக்கு தள்ளப்படக்கூடிய சந்தர்ப்பத்தை நீங்களே எமக்கு உருவாக்கியவர்களாகவே அர்த்தப்படும்.
மேலும் த.தே.கூட்டமைப்பில் உங்களுக்கு ஏற்பட்ட மனவிரக்தியின் காரணமாகத்தான் உங்கள் கட்சியை நீங்கள் அறிமுகம் செய்ய துணிந்ததாக நீங்கள் கூறுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஏனென்றால் த.தே.கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அரசியல் கட்சியாகவோ அன்றி அவர்கள் ஊடாக எமது இயக்கம் தமிழீழத்தை மீட்டுத்தருவார்கள் என்றோ தாம் கருதி அவர்களை உருவாக்கவுமில்லை’ மாறாக அவர்களின் கடந்தகால அரசியல் துரோகங்கள் ஊடாக அவர்களால் எமது இயக்கத்திற்கு ஏற்பட்ட சர்வதேச அளவிலான அவமானங்களை அவர்கள் ஊடாகவே அகற்றவேண்டுமென்ற தேவையின் அடிப்படையிலேயே அவர்களை நாம் இலங்கை அரசின் பாராளுமன்றுக்கு அனுப்பியிருந்தோம்.
இந்த உண்மை நிலையினை நீங்கள் அந்நேரம் அறிந்திராவிட்டால் அதற்கான ஆதாரபூர்வமான கருத்துக்கள் அடங்கிய காணொளி நேர்காணலை எமது தேசத்தின் குரல் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் “சக்தி ரி வி” யின் நேர்காணல் ஒன்றில் த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பாக த.வி.புலிகளின் நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக அவர் தெரிவிப்பதை அவசியம் நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு பின்னர் அது தொடர்பாக உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
அதைவிடுத்து த.தே.கூட்டமைப்பிற்கு பதிலாக நீங்கள் என்ற அறிவீனமான அறிக்கைகளை தயவுசெய்து த.வி.புலிகளின் ஒட்டுமொத்த போராளிகள் சார்பாகவும் விடுக்கவேண்டாம் என்பதையும் காட்டமாக இங்கே கூறிவைக்க விரும்புகின்றோம்.
மேலும் தற்போதைய காலகட்டமானது த.தே.கூட்டமைப்பின் துரோகங்களை நாம் இனங்கண்டு மாற்று அரசியல் ராஜதந்திரங்கள் ஊடாக உலக நாடுகளைநோக்கி எமது இனத்திற்கான நிரந்தர சுதந்திரத்தை சிங்களத்திடமிருந்து பெற்றுத்தரவேண்டுமென சர்வதேச நாடுகளை உலகம் தழுவிய அளவில் நாம் வலியுறுத்துவதற்கான கால அவகாசமாகவே தற்போதைய இலங்கையின் அரசியல் களத்தை நாம் அவதானித்துவருகின்றோம்.
மேலும் த.தே.கூட்டமைப்பின் தற்போதுவரையான அரசியல் துரோகங்களுக்கு உங்கள் சிலரது புதிய புதிய கட்சிகளின் உருவாக்கங்கள் ஊடாக தீர்வினை பெறலாம் என்று நீங்கள் கருதினால் அதை உங்களது மாகா முட்டாள்தனமான கருத்தாகவே நாம் கருதமுடியும்.
ஆகவே த.வி.புலிகளின் புனிதமான பெயரை களங்கப்படுத்தாமல் அதைப் பாதுகாக்கவேண்டியது அவ் அமைப்பில் இருந்த நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமை என்பதை நாம் உணர்ந்து எமது தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட த.வி.புலிகள் எனும் இலட்ச்சணமான பெயரை துண்டு துண்டாக வெட்டி உங்கள் கட்சிகளுக்கு அடையாளம் போடுவதை தவிர்த்து, நீங்கள் விரும்பினால் இலங்கையின் அரசியல் சூதாட்டத்திற்கு பொருத்தமான பழைய எமது அரசியல்வாதிகளின் பெயர்களை பயன்படுத்தி உங்கள் கட்சிகளை பதிவுசெய்யுங்கள்.
எனவே மேற்குறிப்பிட்ட எமது அறிவுறுத்தல்களை நாமும் த.வி.புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற உரிமையுடன் உங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்

0 Kommentare:
Kommentar veröffentlichen