கோலாலம்பூர், பிப்.24- தூக்கத்தில்
குறட்டை விடுவது உயிருக்கே ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள்
எச்சரித்துள்ளனர். குறிப்பாக, மலேசியர்கள் இதில் அதிக கவனம்
செலுத்தவேண்டும் என அவர்கள் கோடிக் காட்டியுள்ளனர்.
தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மலேசியாவில் அதிகரித்து வருகிறது. தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையால் அதிகரித்து வரும் இந்த பிரச்சனையை மலேசியர்கள் பொருட்டாக கருதுவதில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரான டாக்டர் முகமட் நோர்ஹிஷாம் சாலே கூறுகையில், நீரிழிவு நோயைப் பற்றி பரிசோதிக்கும் மலேசியர்கள் குறட்டை பற்றி அலட்சியம் செய்கின்றனர் என்றார்
பொதுவாகவே மலேசியர்கள் நீரிழவு நோய், ரத்த கொதிப்பு மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முனைகின்றனரே தவிர குறட்டை பற்றி பரிசோதிக்க தயங்குகின்றனர் என்று அவர் கூறினார். ஆனால், குறட்டை விடும் பழக்கம் சரி செய்யாவிட்டால் அது மரணத்தில் கொண்டு போய் சேர்க்கும் என அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, குறட்டை பிரச்சனையால் நோய் இல்லாதவர்களுக்கும் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு வருவதோடு புற்றுநோயும் உண்டாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர் எச்சரித்தார்.
நாம் தூங்கும் சமயத்தில், மூச்சுக் குழாய் பாதி அல்லது முழுமையாக அடைத்துக் கொள்ளும் போது குறட்டை ஏற்படுகிறது. அடைப்பினால் உடலுக்கு தேவையான பிராணவாயு குறைவதோடு, கரிமிலவாயு அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனால் தூக்கத்திலேயே உயிர் பிரியும் அபாயம் அதிகம்.
ஆண் பெண் என பேதம் இல்லாமல் இரு பாலரும் குறட்டையால் பாதிக்கப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது மிக அவசியம் என டாக்டர் நோர்ஹிஷாம் கூறினார். குறட்டையை தவிர்ப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மட்டுமே வழிக் கூறமுடியும் என்பதோடு, சில வேளை 'தொடர் மூச்சுக் காற்று' கொடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய வசதியும் தற்போது மருத்துவத்தில் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen