நோயினால் பீடிக்கப்பட்டு இறக்கும் தருணத்தில் நாம் இருக்கின்றோம். உயிர்
எம் உடலைவிட்டு பிரியும் முன்னர் ஒருதடவையேனும் எமது பிள்ளைகளை நாம் காண
வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் கதறியழுகின்றனர்.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 26ஆவது நாளாகவும் தொடர்கின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாரே இவ்வாறு கண்ணீருடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தெரிவித்த உறவுகள், எமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு அனைவரிடமும் வலியுறுத்திவிட்டோம். ஆனால் இதுவரை எவ்வித முடிவும் எமக்கு கிட்டவில்லை. இந்நிலையில் இறுதி முயற்சியாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்த ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்தே பசி தூக்கத்தை துறந்து இவ்வாறு இரவு பகலாக போராடி வருகின்றோம் என்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வுமின்றி தொர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:
Kommentar veröffentlichen