என் தமிழ் தேசமே இவர்கள் யாரென்று நீ அறிவாயா....?

என் தமிழ் தேசமே இவர்கள் யாரென்று நீ அறிவாயா இவர்கள் களத்தில் நின்றதனால்தான் நீங்கள் நிம்மதியாக உறங்கினீர்கள் இவர்கள் தங்கள் வாழ்வை மறந்து உங்களுக்காக போராடியவர்கள் இவர்களை ஒதுக்கி வைத்துவிடாதீர்கள் இவர்கள் வணங்கப்பட்ட வேண்டியவர்கள் ஒருகணம் சிந்தியுங்கள் தமிழர்களே...

எதற்காக போராடினார்கள் இவர்கள் எமக்காக போராடியவர்கள் மறந்துவிடாதீர்கள். .
நாட்டுக்காக போராடியவர்கள் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் பரிதாபநிலை!
அன்று ஓமந்தை கடந்தபின் விடுதலை வீரராகவும் களமுனைப்புயல்களாகவும் தெரிந்த நாங்கள் இன்று மாங்குளத்தில் விறகுவித்துக்கொண்டும் முறுகண்டியில் கச்சான் வித்துகொண்டும் இருக்கிறோம்..... இன்னும் ஐந்து வருடம் கடந்தபின் ஆனையிறவுவெட்டையிலோ முகமாலை திருப்பத்திலோ யாரேனும் ஊனத்துடன் பிச்சையெடுத்தால் கூர்ந்து கவனியுங்கள்..... அது போராளியாகவோ அல்லது மாவீரன் பெற்றெடுத்த பிள்ளையாகவோ இருக்கும்... அப்போதும் கடந்துசெல்லுங்கள்........8 ஒன்றுசொல்கிறோம் உங்களுக்காகவும் எங்கள் தாயகத்துக்காகவும் தலைவன் வழிசென்றதை கௌரவமாகவே கருதுகிறோம்

0 Kommentare:

Kommentar veröffentlichen