கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பொதுமக்களின் காணி விடுவிக்கப்படாத நிலையில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புலவுக்குடியிருப்பு காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிலவுக்குடியிருப்பில் 54 (காணி அனுமதிபத்திரம்) போமிற் உள்ள 9 காணி விடுவிக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த 84 குடும்பங்களில் 17 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை 7 குடும்பங்களுக்கு சொந்தமான அரைவாசி காணிகள் இராணுவத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொதுமக்களிற்கு சொந்தமான 41.52 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 0.48 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படவுள்ளதாகவும் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen