"பல்துறைச்செல்வர் " தோழர் சுரேந்திரன் ஐயா!...
நட்பிற்கும்,பண்பிற்கும்,பணிவிற்கும் ஒரு
உதாரண புருஷன்.மறக்க முடியாத மனிதர்!
"பல்துறைச்செல்வர் " தோழர் சுரேந்திரன் அவர்களின்
7ம் ஆண்டு (02.03.2017) நினைவுகளை சுமந்து எமது
சமர்ப்பணம்!...
நம்மோடு இருப்பவரோ! அல்லது இறந்தவரோ!
அவர்வாழும்காலத்தில்,அவரின்வாழ்க்கைப்பயணம் எப்படியான சிறப்புகளை சுமந்து வந்தது என்ற பதிவுதனைதெரிந்தவர்கள்,தெரியாதவர்களுக்கு வெளிப்படுத்துவது மிகச்சிறந்த பணி என்று கற்றோர் உலகம் கூறுகின்றது
அந்த வகையில் "கலைச்சுடர்" தீபன் அவர்களின்
நல்லதோர் முயற்ச்சிக்கு!...
நாமும் "நற் பலன் தரும் தேடல்களை,
நம்மவர் ஆற்றல்களை உலகறிய செய்வோம்" என்பதற்கமைய பணியாற்றுகின்றோம்,
அனைத்து தமிழ் பேசும் நெஞ்சங்களும்
வழங்கும் நல்ஆதரவிற்கு மிக்க நன்றி...
நெஞ்சுக்கு பக்கத்தில் : தோழமை கொள்ளத் தக்கதோர் தோள்,தோழர் சுரேந்திரன்!
---------------------------------------
நான் தமிழ் அலை வானொலியில் "கவிதை பாடும் நேரம்" நிகழ்ச்சியில் இவருடைய குரலை முதன் முதலில் கேட்டிருக்கின்றேன். கே.பி.லோகதாஸ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அங்கே பாடப்படுகின்ற கவிதைகளுக்கு இவர் விமர்சனம் சொல்வார். இவருடைய நாவில் இருந்து உதிர்கின்ற தமிழ், வெறும் விமர்சனங்களாக இல்லாது கவிதைகளாகவும் கனக்கும்!
நான் முதன் முறையாகக் கலையகத்திற்கு சென்ற போது, இவருக்கென்று அங்கே ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. நிர்வாகத்தினரின் பார்வை படும்படி அந்த அறை எதிரில் இருந்தது. இவர்தான் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பு, போய் கதையுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். இவரும் ஏற்கனவே எனது குரலைக் கேட்ட படியால், தம்பிக்கு எப்படியான நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் இருக்கின்றது என்று, முகாமையாளருக்கு உரிய இறுக்கமான குரலில் உரையாடினார்.
உருவத்தைப் பார்த்து விட்டு மிகவும் கடுமையானவர் போலிருக்கின்றதே என்று நான் நினைத்தேன். அவரது அலுவலக அறையில் இருந்து முதலாம் மாடிக்கு அழைத்துச் சென்றவுடன் நண்பரைப் போன்று உரையாட ஆரம்பித்துவிட்டார். அதனால்தான் தோழர் என்று இவரை அழைத்தார்கள் என்று நினைக்கின்றேன்.
நான் ஒரே ஒரு நிகழ்ச்சியில் கவிதையோ, சிந்தனைகளோ, எதாவது ஒன்று படிப்பதற்கு தினமும் சென்று வருவேன். அப்போது எனக்கு ஒலிபரப்புத் துறையில் அவ்வளவு காதல்!
தோழர் சுரேந்திரன் இல்லாத நாட்களில் அங்கே நிற்பதற்கு மனசு வராது. முதல் நாளிலேயே எனக்கும் அவர் தோழராகிவிட்ட காரணத்தினால்.
அங்கே பணியாற்றுபவர்களுக்கு கீழ் தளத்தில் சமையல் செய்வார்கள். தோழர் மிகவும் சுவைத்துச் சாப்பிடுவார். இவர் சுவை மிக்க உணவுகளில் மிகுந்த பிரியமுடையவர். இப்படியே இவரது அரவணைப்பு தொடர்ந்தது.
என்னுடைய குரலில் கவிதைகள் கேட்பதற்கு இவருக்கு மிகவும் பிடிக்கும். "காதல் தீபம்" என்று ஒரு நிகழ்ச்சியை தயாரித்து, கவிதைகளையும் எழுதித் தந்து விட்டு, சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்து ரசித்துக் கேட்பார். மறு நாள் பாராட்டுவார்!
அந்த நிகழ்ச்சியின் மூலம்தான் நெஞ்சுக்கு நெருக்கமான நேயர் ஒருவரால் இவருக்கு "ரஜீத்" என்ற பெயர் சூட்டப்பட்டது!. பின் நாட்களில் வேறு நிகழ்ச்சிகளில் கூட "ரஜீத்" என்ற பெயரில்தான் இவர் வலம் வந்து கொண்டிருந்தார்.
நான் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதற்கு இவர்தான் வாசல்களைத் திறந்து விட்டவர். ஆர்வம் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு இவர் ஒரு சிறந்த ஆசான். விளம்பரங்கள் கூட எனது குரலில் வருவதையும் விரும்புவார்.
இவருடைய மேசையில் எப்போதும் தமிழ் அகராதிகளைக் காண முடியும். அவற்றை தினமும் படிப்பதால் இவரும் நடமாடும் தமிழகராதி ஆகிவிட்டார். சில சந்தேகங்களை எல்லாம் இவரிடம் கேட்டுத்தான் தெளிவு பெறுவார்கள். கலசம், கேள்வி நேரம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கேள்விகள் தயாரிப்பதோடு, வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டியையும் தயாரிப்பது இவர்தான்.
கேள்வி நேரம், கவிதை பாடும் நேரம், தத்துவ முத்துக்கள் போன்ற நிகச்சிகளில் இவருடைய குரலைக் கேட்க முடிந்தது. தத்துவ முத்துக்களில் இவரது தமிழ் ஆளுமை ஓங்கி ஒலித்தது.
நாட்கள் செல்லச் செல்ல இவர் எனக்கு நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டார். நான் ரஜீத் என்று பெயர் சொல்லி அழைப்பதை மிகவும் விரும்புவார்.
நான் இவருடைய சந்தோஷங்களுக்கு உதவிய இனிமையான நாட்களும் உண்டு. எந்த விடையத்தையும் என்னுடன் மனம் விட்டுப் பேசுவார். வயதில் அவரை விடவும் மிகவும் சிறியவன் என்றாலும், எனக்கும் அவர் ஒரு தோழர்தான்!
ஆட்களுக்கு ஏற்றால்போல் இவர் பேசுவார். சந்தர்ப்பவாதி என்பதால் அல்ல, யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற அதி உயர் நேசிப்பே அதற்குக் காரணம்!
விடுமுறையில் பிரான்ஸ் வந்த அன்பான நேயர் ஒருவர், எனக்கு ஒரு பரிசுப் பொருளை வழங்கினார். நான் அதைத் தோழர் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அதைப் பெற்றுச் சென்ற தோழர், மறு நாள் கலையகத்திற்கு வந்தவுடன் என்னைத் தேடி வந்து, "ராசா எங்கேயடா அதை வாங்கினாய்? எனக்கு இன்னொன்று தருவியா? என்று கேட்டார். எனக்கு ஒருவர் பரிசளித்ததைத்தான் உங்களிடம் கொடுத்தேன். இன்னொன்று என்னிடம் இல்லை என்று சொன்னேன்." பரிசுக்குரியவரிடம் இருந்து மீண்டும் ஒன்றை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் என்னால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை!
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, சில தனிப்பட்ட பிரச்சனைகளால் தோழர் (ரஜீத்) ஊடகத்தில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டார். அதன் பின்பு அவரை அதிகம் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.
வருடங்கள் பல உருண்டோடிய பின்பு, ஒரு நாள் லாசப்பல் பகுதியில் எனக்கு எதிரில் வந்த தோழரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. விலகிச் சென்று கொண்டிருந்தார்.
நான் பின்னால் நடந்து சென்று அவரை உரிமையோடும், அன்போடும் கட்டிப்பிடித்தேன். திடுக்கிட்ட தோழர் நான் என்பதைத் தெரிந்து கொண்டு அகம் மகிழ்ந்தார்.
பின்னர் ஒரு உணவகத்தில் அமர்ந்து உரையாடிய போதுதான் தனக்குக் கண் பார்வை குறைந்து விட்டது என்று சொன்னார். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
அன்றும் கூட, எனக்குக் கிடைத்து நான் அவருக்குக் கொடுத்த பரிசுப் பொருள் போன்று வேறு ஒன்றை கேட்டார். ஏன் அதைக் கேட்கின்றீர்கள் என்று கேட்டேன். அவ்வளவு சுகமாக இருந்தது என்று பதிலளித்தார்.
அந்தப் பரிசுப் பொருள் என்ன? அதில் ஏன் அவர் அப்படிச் சுகமடைந்தார் என்பதை மட்டும் கேட்காதீர்கள்!
அன்றைய சந்திப்பில் தோழர் (ரஜீத்) என்னோடு உணவை உட்கொண்டு விட்டுச் சென்றவர்தான். அதற்குப் பின்பு அவரை நான் பார்க்கவில்லை!
தோழர் (ரஜீத்) என்ற நல்ல மனிதரை யாருக்குத்தான் பிடிக்காது! தோழமை கொள்ளக் காலன் அவரை அழைத்தான். நினைவுகளை மட்டும் எங்கள் மனதில் விதைத்து விட்டு, விடை பெற்றுச் சென்று விட்டார்.
"ரஜீத், என் உயிர் இந்த உடற்கூட்டில் வாழும் வரை. உங்கள் நினைவுகளும் உயிர்த்திருக்கும்!"
பிரியமுடன் கி.தீபன்.
-------------------------------
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறையருள் வேண்டுகின்றோம்.
"அசோத்ரா கலைஞர்கள் சுற்று"

0 Kommentare:
Kommentar veröffentlichen