அனுராதபுரத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து : 38 பேர் வைத்தியசாலையில்...! (படங்கள்)

அனுராதபுரம் - பாதெனிய மஹகல்கடவில் இடம்பெற்ற கோர விபத்தில் 38 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றும்இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 28 பேரும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் 8 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen