சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில்
சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில்
நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பிரபல
கார் பந்தைய வீரர் அஸ்வினுக்கு இலங்கையைச் சேர்ந்த நிவேதா உடன் திருமணமாகி
ஒராண்டு நிறைவடைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நட்சத்திர
ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு
திரும்பினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிவேகமாக வந்த போது பிஎம்டபிள்யூ கார் டயர்
வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை
மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது. இதில் கார் திடீரென தீப்பற்றி
எரிந்தது
0 Kommentare:
Kommentar veröffentlichen