பிறந்தநாள் வாழ்த்து செல்வன் லதுசன் பாலகாந்தன்21.03.17

 இலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி  பாலகாந்தன் தம்பதிகளின் செவ்வப்புதல்வன் லதுசன் 21.03.17 ஆகிய அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரைஅன்பு அப்பா, அம்மா, அக்கா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்வாக பிறந்தநாள் கொண்டாடும்,இவரை அனைவரும்வாழ்தி நிற்கும் நேரம் ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்தி நிற்கிறது  அத்தோடு
லதுசன் அவர்களின் அம்மா அவருக்காக எழுதிய கவிதையை கீழ்கானலாம்

*என் செல்ல மகனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...*

*என் கருவில் உருவான
இரண்டாவது உயிரிவன்..

எட்டி உதைத்தால்
அம்மாவுக்கு வலிக்குமென்று அமைதியாய் வளர்ந்தவன்...;

வெளியுலகைப் பார்த்ததில் இருந்து
இன்றுவரை எங்கள் உயிரானவன்...."

என்னை தன் இமைபோல் காப்பவன்..
என் கண்களில் கண்ணீர் கண்டால்
வாடும் அவன் வதனம் பார்த்து மறையும் என் கண்ணீரும் தான் ...!!

வயதில் சிறியவன்
ஆனாலும் உள்ளத்தால் பெரியவன்
பிறர் மனம் நோகாது
நடக்கும் பண்பாளன்
பள்ளியில் இச்சிறுவயதில்
பண்புக்குரியவனெனபெயர் பெற்ற
பெருமைக்குரிய
மகத்தானவன்...**
என் செல்லக்குட்டிக்கு
இன்று பிறந்தநாள்

என் உதிரத்தில்
உருவானவனுக்கு இன்று பிறந்தநாள்,.

பண்பில் உயர்வாய்
இரக்க மனம் கொண்டு
கல்வியில் கரை தொட்டு
பார் போற்ற
சிறப்போடு நீயும்
நோய்நொடியின்றி
நூறாண்டு வாழ
எங்கள் வாழ்த்துக்கள் ...
செல்லக்குட்டி.....&

அன்புடன் ...
அப்பா, அம்மா, அக்கா

0 Kommentare:

Kommentar veröffentlichen