கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட்ட பிலக்குடியிருப்பை சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்குகின்ற திட்டத்திற்கு சபேசன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பங்களிப்பு செய்தது பற்றி சில நாட்களுக்கு முன்னர் முகநுாலில் எழுதியிருந்தார்
மேலும் 3 சைக்கிள்களுக்கு உதவி தேவை என்று சபேசன் எழுதியிருந்த நிலையில் உடனடியாகவே மேலும் சில உறவுகள் பங்களிப்பதற்கான உறுதியை அதிலேயே தந்திருந்தார்கள்.
அதன்படி 10.03.2017 முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில், வலயக்கல்விப்பணிப்பாளர் முன்னிலையில் 16 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன என்கின்ற தகவலை அனைவருக்கும் அறியத் தருகின்றார் சபேசன் அவர்கள்
இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.
வலி வடக்கில் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாத ஒரு கிராமத்தில் உள்ள பாடசாலை தனது மாணவர்களை தினமும் ஆட்டோவில் ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆட்டோவில் 15இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அழைத்து வரப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட தொகையான மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராது விட்டால், பாடசாலைக்கான அங்கீகாரத்தை கல்வி அமைச்சு ரத்து செய்து விடுவதற்கான வாய்ப்பு இருப்பதனால், பாடசாலையை காப்பாற்ற வேண்டி இதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் தமது கிராமத்தின் பாடசாலைக்காக தம்மால் முடிந்த பங்களிப்பினை செய்தபடி இருக்கிறார்கள்.
ஆட்டோவில் ஏற்றி இறக்குவதற்கு பதிலாக மாணவர்களுக்கு சைக்கிள்கள் வாங்கித் தருகிறோம் என்று அண்மையில் அந்தப் பாடசாலைக்கு தெரிவித்திருந்தோம். இன்னமும் பதில் வரவில்லை. சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வராது விட்டால் என்ன செய்வது என்று அந்தப் பாடசாலையின் அதிபர் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடும்.
கேப்பாப்புலவு மாணவர்களுக்கான சைக்கிள் திட்டம் வெற்றி அடைவது மற்றைய பாடசாலைகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். என்று கருதுவதாக சபேசன் கருதுகின்றார் இவர்கள் பணிவாழ்க இல்லாமை ஒழிய இருப்பர் கொடுக்க நடக்கும் யாவும் நல்லவையாவும்

0 Kommentare:
Kommentar veröffentlichen