மறக்கத்தகுமோ...? 15.03.2017

"புரட்சிகர மக்கள் இராணுவம் புலிகள் தலைமையில் உருவாகிறது" இப்படித் தலைப்பிடப்பட்டு எங்கட ஊருக்குள்ள நின்ற இயக்கப்பெடியள் 12 பக்கமுள்ள ஒரு பேப்பர கொண்டு வந்து தந்தாங்கள்.இது தான் அம்மா எங்கட உத்தியோகபூர்வமான பேப்பர் வாசியுங்கோ எங்கட இயக்கத்தப்பற்றி, இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றி, இயக்கம் மீதும் எம் மக்கள் மீதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கெடுபிடிகள் பற்றி, எம் வீரவேங்கைகள் பற்றி என்று பல விடயங்களை சொல்லி இருக்கிறோம் என்றாங்கள். எனக்கு வாசிக்கத் தெரியாதுடா மோன உன்ட கொம்மாதான் வாசிச்சு காட்டினவா...இது என் அம்மம்மாவின் கூற்று.
விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு தனது கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்து சிங்களத்தின் கூலிப்படைகளுக்கு தமது போரியல் திறமையினால் பலத்த இழப்புக்களை கொடுத்து வந்த போது மக்கள் அவர்களை இனங்காணத் தொடங்கினர். தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே தமக்கான வழ்வியல் அதிகாரத்தை பெற்றுத்தரக் கூடிய வல்லமைமிக்க போராளிகளையும் தலைமையையும் கொண்டுள்ளார்கள் என்பதை இனங்கண்டு கொண்டனர். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைப்புலிகள் மீது நம்பிக்கையுள்ளவர்களாக மாறிய போதும் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் நடைமுறை நிலைப்பாடுகளை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இருந்தது. இதை உணர்ந்த தலைமை அதற்காக ஊடகம் ஒன்றின் உருவாக்கம் வேண்டும் என்பதை முடிவு செய்தார். அதனூடாகவே விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வமான ஏடாக மாதம் தோறும் ஒரு இதழ் என்ற வகையில் புலிகளின் செய்திகளைத் தாங்கி வரும் வகையில் உருவாக்கப்பட்டது "விடுதலைப்புலிகள்" பத்திரிகை.
15.03.1984 ஆம் ஆண்டு தனது மதல் குரலை மக்களிடம் கொண்டுவந்து சேர்த்த விடுதலைப்புலிகள் இறுதி யுத்தம் என்ற பெயரில் நடந்த இனவழிப்பின் உச்சமான 2008 வரை வெளிவந்து மக்களுக்கான செய்திகளை சுமந்து நின்றது. முதல் ஏட்டில் முதல் மாவீரன் சங்கர் நினைவுகளையும் தாங்கி வந்த விடுதலைப்புலிகள் ஏடு தனது இறுதியாக தனது பணியை இடைநிறுத்தியதுவரை பலநூறு மாவீர தியாகங்களை பல ஆயிரம் வெற்றி வீரக்கதைகளை சுமந்து வந்தது. இவ்வாறு என் பத்தியை எழுதிக் கொண்டிருக்க...
தம்பி திரும்பவும் அந்த பேப்பர் வருமோடா...? அம்மம்மா வினவுகிறா. வெறும் புன்னகையோடு கடந்து செல்கிறேன் நான்

0 Kommentare:

Kommentar veröffentlichen