காணிக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
அறுபது வருடங்களாக தாம் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதலாம் திகதியிலிருந்து தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தபோராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆறு தலைமுறையாக தாம் வாழ்ந்து வந்ததாகவும், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததை தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் மாதிரி கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.
கேப்பாபுலவு பிரதேசத்தில் 144 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும், சொர்ண பூமி பத்திரம் 48 குடும்பங்களிடமும், பேமிற் 25 குடும்பங்களிடமும், உள்ளதாகவும் ஏனைய குடும்பங்கள் உறுப்படுத்தல் ஆவணங்களை வைத்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் வாழ்ந்ததற்கான ஆதரங்களாக பாடசாலை, பொதுநோக்குமண்டபம், ஆலயங்கள் உள்ளிட்ட பல வளங்களும் உள்ள தமது நிலங்களை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen