எதைச் சாதித்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

ஐம்பது வருட பழமை அரசியியல் சாணக்கியத்தால் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தார் எதிர்க்கட்சி தலைவர்
ஈழப்போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர இந்திய பௌத்த மற்றும் வல்லரசுகளுடன் கூட்டு சேர்ந்தனர்

ஈழமெங்கும் மக்கள் தம் உறவுகளைத் தேடி அழுதபோது பாராமுகமாய் சிங்களதேசத்திற்கு உறுதுணையாக நின்றார்கள், மக்கள் உண்ணாநோன்பிருக்க சாணக்கியர் கோயிலில் தரிசனம் தந்தார்
நிபந்தனையின்றி மகிந்தவுக்கு ஆதரவை வழங்கி, பெருமிதத்துடன் மைத்திரியை ஆதரித்து நல்லாட்சிக்கு வலுச்சேர்த்தி தமிழ் மக்களை தெருவில் விட்டனர்

படுகொலைகள், வன்புணர்வுகள், போராளிகளின் மர்மமான இறப்பு இது தொடர்பாக எங்காவது பேசியிருக்கிறார்களா? அல்லது சர்வதேசத்திடம் இது தொடர்காக குரல் கொடுத்திருக்கிறார்களா?

தமிழனம் பற்றிய கவலை சிறிதும் இன்றி சிறப்பாக அரசியியலில் ஈடுபடும் இக்கூத்தமைப்பை என்ன செய்யலாம்?
பெயருக்காக ஓர் தமிழின அரசியியல்வாதிகள் தேவையா?
மாவீரர்களின் துயிலுமில்லம் உடைத்து புத்தர்சிலை, காந்தி சிலை முளைக்க பாடுபடும் இவர்களை இனியும் ஆதரிக்கலாமா?
தமிழர் தாயக நிலங்களை வெளிநாடுகளுக்கும் சிங்கள பௌத்த அரசுக்கும் தாரை வார்க்கும் இவ்வமைப்பை தமிழினம் ஏற்றுக்கொள்ளலாமா?
நீதியற்ற அரசின் எச்சை எலும்புகளை உமிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வமைப்பால் தமிழருக்கு இதுவரையில் கிடைத்திட்ட பலன்களை பட்டியலிட எந்த தமிழ் அரசியியல்வாதிக்கும் துணிவிருக்கிறதா?
மக்களின் போராட்டமும் அதை வழிநடத்தும் சமூக ஆர்வலரின் அர்ப்பணிப்போடுதான் தமிழினம் இன்னும் உயிர்வாழ்கின்றது. இதற்காவா? இவ்வமைப்பை ஆதரித்தோம்?

கிராம விவசாயம், மானாவரிச் செய்கை என்பன கைவிட்டுப்போய் மக்கள் ஏழ்மையில் வாழ இவ்வமைப்பு நகர்ப்பகுதிகளில் பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதை அனுமதிக்கலாமா?
மக்கட்புரட்சியை அடக்கி சிங்கள அரசுக்கு மாமா வேலை பார்க்கும் கூத்தமைப்பை இன்னும் நம்பி வாக்களிக்கலாமா?
கூட்டமைப்பை சார்ந்த உறுப்பினர் படுகொலைக்கு கூட நீதி கேட்டு போராடாத (அண்மையில் அண்ணன் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் படுகொலைக்கு) அமைப்பா! தமிழினப் படுகொலைக்கும், அதன் விடிவுக்கும் போராடப்போகிறது
இவர்களால் சாதிக்க முடித்தவை என்ன?
வாக்களித்த மக்கள் தெருவோரமாக இருப்பிடம் கேட்டு போராடுகின்றனர்
உறவுகளை இழந்த மக்கள் உறவை தேடி அலைந்து நொந்து வாழ , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியியல் வாதிகள் சாந்திமுகுர்த்த வாழ்க்கை தினம் தினம் வாழ்கின்றனர்.
இனியும் ஏமாறவேண்டாம் என் தமிழ் உறவுகளே!
உங்கள் தேவைக்காக நீங்கள் களமாடும் போது இந்த நாதரி அரசியியல்வாதிகள் எதற்கு? இந்த தேர்தல் எதற்கு?
ஏன் இவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
சிந்திப்போமா உறவுகளே!

0 Kommentare:

Kommentar veröffentlichen