தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் எங்கட கடிதத் தலைப்பை வெற்றுத்தாளாகக் குடுத்தாலே அதிலை தீர்வு தெளிவாக அச்சடிச்சிருக்குத் தம்பி”

ஒவ்வொரு தடவை பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் சென்ற போதும் “தனிநாட்டுக் கோரிக்கை” யை விட்டுக் கொடுத்துத்தான் சென்றதாக சுமந்திரன் அடுத்த ஒரு ‘ஜில்-மால்’ விட்டிருக்கிறார்.
இதைக் கேட்கும் போது, 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி சந்திரிகாவின் முடிவெடுக்க முடியாத சமாதானத் தூதுவர்கள் திரு.லயனல் பெர்னான்டோ தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் வந்து இறங்கினர்.

விடுதலைப் புலிகள் தரப்பை பிரிகேடியர். தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தை முடிந்து தலவர் அவர்களுக்கும் சென்று விளக்கி விட்டு யாழ்.கச்சேரியடியில் அமைந்திருந்த தனது முகாமிற்குத் திரும்பினார் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

பேச்சுவார்த்தைகள் தனிநாட்டுக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்ற கருத்துக்களைக் கொண்ட போராளிகள் சார்பில் ஒரு போராளி தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இது பற்றிக் கேட்க, அவர் தனது புன்சிரிப்புடன்…
“தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் எங்கட கடிதத் தலைப்பை வெற்றுத்தாளாகக் குடுத்தாலே அதிலை தீர்வு தெளிவாக அச்சடிச்சிருக்குத் தம்பி” என்று பதிலளித்தாராம்.
வெறும் கடிதத் தலைப்பில் தெளிவாக அச்சிடப்பட்டிருப்பது வேறு ஒன்றுமல்ல,

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பதே.
பேச்சுவார்த்தைகளின் போது நீதியான ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு முன் வைக்கப்படும் பட்சத்தில் அதைப் பரிசீலிப்பதற்கு விடுதலைப் புலிகள் தயாராகவிருந்தனர். திம்புக் கோட்பாடுகள் தழுவிய,
தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்படல், தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு , சுய நிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதும் அதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் தொடரப்பட வேண்டுமென்பதிலும் தமிழர்களுடைய பிரச்சினையை அடிப்படைப் பிரச்சினையென்றும் அன்றாடப் பிரச்சினையென்றும் தெளிவாக வகைப்படுத்தி அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க கதைப்பதில் பிரயோசனமில்லையெனவும் உறுதியாக நம்பினர் விடுதலைப் புலிகள்.

இன்னுமொரு வகையில் கூறுவதானால் தமிழர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்வராத சிங்கள அரசுகள் ஒரு போதும் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக விளங்கி வைத்திருந்தனர் அதுவே உண்மையும் யதார்த்தமும் ஆகும். எனவேதான் இறுதியாக ஒரு சுதந்திர தனியரசை நிறுவுவதற்காகவே எந்த விட்டுக் கொடுப்பின்றியும் தம்மையே அர்ப்பணித்துப் போராடினர்.
இதையே மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களும் ஒரு ஊடகத்திற்கு 2002 – 2005 பேச்சுவார்த்தைகளின் போது பின்வருமாறு கூறியிருந்தார்.

“Only we can consider fully autonomic government on the basis of self determination ”
நான்கு குருடர்கள் யானை பார்த்த கதை” போல விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பார்த்தவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை. அவ்வாறானவர்களிடம் வேண்டுமானால் சுமந்திரன் இப்படியான ‘ஜில்-மாலுகளை” நமப வைக்கலாம்.

எல்லாரிட்டையும் சுமந்திரனின் பருப்பு வேகாது. இப்போது நீங்கள் கேட்பீர்கள் ” அப்போ விடுதலைப் புலிகள் ஏன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்கள்?” என்று கேட்கலாம். ஏற்கனவே சிலர் கேட்ட கேள்வியும்தான். அதற்குரிய பதிலை இப்போது கூறுவது பொருத்தமற்றதும், தேவையற்றதும் கூட. எனினும், சில சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் அதை ஓரளவுக்குக் கண்டறிந்துள்ளன. எனவேதான் விடுதலைப் புலிகளின் கருத்தியலையே (Ideology) அழிக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றன.

0 Kommentare:

Kommentar veröffentlichen