ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந்திய
மீனவர்கள் வருடாந்தம் கலந்துகொள்ளும் நிலையில் இம்முறை இந்திய மீனவர்கள்
திருவிழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ளவதை புறக்கணித்துள்ளனர். இம்முறை இந்தியாவில் இருந்து 5015 ஆயிரம் பக்தர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து 2000 ஆயிரம் பக்தர்கள் பங்குகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில் இன்னொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது என இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளது அடுத்து இந்தியாவின் தமிழக மீனவர்கள் தமது கடுமையான விரோதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள போவதில்லை என இந்த மீனவர் சங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

0 Kommentare:
Kommentar veröffentlichen