திரு அருணாசலம் செல்லத்துரை சிவசோதி
|
மண்ணில் : 7 சனவரி 1949 — விண்ணில் : 6 மார்ச் 2017 |
|
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும்
கொண்ட அருணாசலம் செல்லத்துரை சிவசோதி அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை
அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, சந்திரஹாசன், ரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நீலகண்டன், தட்சணாமூர்த்தி, கணேசமூர்த்தி(சுவிஸ்), நவரத்தினராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆரோக்கியராஜ்(காந்தன்), தனுஷா, சபாதினி காத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லைவாணி, கிரிஸாம்பாள், கலைச்செல்வி, நித்தியபாமா, காலஞ்சென்றவர்களான
சாரதாமணிதேவி, தவமணிதேவி, மற்றும் இந்திராதேவி, காலஞ்சென்ற செல்வராஜா,
கமலாதேவி, சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சாந்தலிங்கம், மற்றும் சோமசுந்தரம், நாகேஸ்வரி, முருகானந்தவேல், மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஷெக்கினா, ரனிஷா, மீரா- சோஃபி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மனைவி, பிள்ளைகள் |
நிகழ்வுகள் |
கிரியை |
திகதி: | சனிக்கிழமை 11/03/2017, 10:00 மு.ப |
முகவரி: | Landwehr Friedhof, Landwehr 318, 46045 Oberhausen, Germany |
|
|
0 Kommentare:
Kommentar veröffentlichen