பொய்களின் வேசகாறன் புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி உண்ணாவிரத போராட்டத்தை கண்டுகொ ள்ளவில்லையாம்.......!

5 வது நாளாக தொடரும் புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் !!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 வது நாளாகவும் தொடர்கின்றது.

கேப்பாப்பிலவு மக்களைப் போன்றே, புதுக்குடியிருப்பு காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டம், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.

தமது சொந்த காணியை மீட்பதற்கான, முல்லைத்தீவு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 வது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. எனினும் இந்த சந்திப்பில் சிங்களம் தமது ஆதிக்கத்தை காண்பித்ததின் அடிப்படையில் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாகவும், எனினும் தமக்கான தீர்வினை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நல்லாட்சி என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் எமது தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள் !!

0 Kommentare:

Kommentar veröffentlichen