யாழ்ப்பாணத்தில் உள்ள மின் உபகரணங்கள் வியாபார நிறுவனத்தின் உரிமையாளருடைய வீடு தீப் பிடித்ததில் பலகோடி ரூபா பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகின . தீ அணைப்புப் படையின் துரித பணியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் வீடு முற்றாகச் சேதமானது .
இச் சம்பவம் யாழ் கச்சேரி கிழக்கொழுங்கையில் உள்ள வீட்டில் நேற்று பிற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது .
வீட்டில் வர்த்தகரும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வசித்து வருகின்றனர் .அவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே தீப்பிடித்துள்ளது . வீடு எரிந்து கொண்டிருந்தபோதே உரிமையாளர் வீடு திரும்பியுள்ளார் .
தொடர்ந்தும் பல முயற்ச்சிகள் மேற்கொண்டும் பலகோடி ரூபா பெறுமதியான பொருட்கள் நாசமாகின . சம்பவ இடத்துக்கு வருகை தந்த யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் .எனினும் தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் அறியப்படவில்லை .இன்று முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர் .

0 Kommentare:
Kommentar veröffentlichen