துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள் : கேப்பாபுலவு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த சிங்களம் !!
எமது மண்ணை கொள்ளை ஆக்கிரமித்து நயவஞ்சக தனமாக குடி கொண்டுள்ள சிங்கள இன்வெறியர்கள் எமது சொந்த நிலத்தில் கால் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதனை பார்த்து கொண்டு இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள்..
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை , தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பலகையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருவோரையும் தங்களையும் விமானப்படையினர் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் நேற்றைய தினம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று குறித்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி 19 நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளில் இருந்து விமான படையினர உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்கள் ஊடாக போராட்டத்தை குழப்ப படையினர் சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவ்வாறான சம்பவங்கள் சில இடம்பெற்றதாகவும் எந்த தடை வந்தாலும் தாம் காணிக்குள் செல்லும்வரை போராட்டம் நிறுத்தப்படாது எனவும் கேப்பாபுலவு மக்கள் உறுதிபட கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தமது போராட்டத்திற்கு அச்சமின்றி பூரண ஆதரவு வழங்குமாறும் கோரிய நிலையில் விமானப்படையினரின் இந்த அறிவித்தல் பலகை தம்மை அச்சுறுத்தும் நடவடிக்கை என கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது
அந்தவகையில் மக்களின் இந்த போராட்டத்திற்கும் இன்றும் பலர் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழ் அரசியல் வாதிகள் எங்கே என்று தெரியவில்லை.. எதோ களியாட்ட நிகழ்வுகளுக்கு வருவதுபோல வந்து செல்கிறார்கள்..

0 Kommentare:
Kommentar veröffentlichen