வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான இலங்கராசா இளங்கோவன் (31 வயது) மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் முன்னாள் போராளியாவார். விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டு வந்த “கோபு” என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் உத்தரவிட்டார். பிற்பகல் வேளையில் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. அத்துடன் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் சடலத்தை பார்வையிட்டதுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சங்குள பொலிசார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில். புலன் விசாரணைகளை மனைவியிடமும் உறவினர்களிடமும் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Kommentare:
Kommentar veröffentlichen