சிங்கப்பூர்க்கும் இலங்கைக்குமிடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வாண்டிற்குள் கைச்சாத்திடப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, சிங்கப்பூர் இவ்வாறு தனது கருத்தை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen