முல்லைத்தீவில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப்
பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு கிரா மத்தைச் சேர்ந்த 138 குடும்பங்கள்
தமக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தினர் தங்களிடம்
திருப்பி கையளிக்க வேண்டும் எனக் கோரி நேற்று 13ஆவது நாளாகவும்
கவனயீர்ப்பு போராட்டத்தையும் இரண்டு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்
போராட்டத்தினை ஆரம்பித்து நேற்று மூன்றாவது நாளாக முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 05 மணியளவில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன்
மற்றும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா உட்பட வடக்கு மாகாண சபையின் கல்வி
அமைச்சர் த. குருகுலராஜா, து.ரவிகரன், வ.கமலேஸ்வரன் ஆகியோர்
கேப்பாப்பிலவுக்கு நேரில் சென்று உண்ணாவிரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை
சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அரசியல் பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெரிவிக்கையில்,
நீங்கள் உங்களின் போராட்டங்களை தொடருங்கள். அதற்கு நாங்கள் முழு ஆதரவினை தருகின்றோம்.
ஆனால் இந்த உண்ணா விரதப் போராட்டத்தினை நீங்கள் கைவிட வேண்டும்.
ஏனெனில் எமது நாட்டில் உண்ணாவிரதம் இருந்தநிலையில் தியாகி திலீபன்,
அன்னைபூபதி ஆகியோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அவர்கள்
உயிர்நீத்துள்ளமை உலகறிந்த உண்மையாகும்.
எனவே உண்ணாவிரதப் போராட்டத்தின் ஊடாக எமது நிலங்களை மீட்க முடியாது.
எமது உயிர்களைத்தான் இழக்க நேரிடும் என்று சிறீதரன் எம்.பி அவர்களி டம்
அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உண்ணாவிரப்
போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடுவதாகவும் தொடர்ந்து கவனஈர்ப்பு
போராட்டத்தினை தொடர்வதாக சம்மதித்ததை அடுத்து உண்ணா விரதப் போராட்டத்தில்
ஈடுபட்ட இருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்
மற்றும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகிய இருவரும் இணைந்து பிற்பகல்
05.30, மணியளவில் நீராகாரத்தை வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து
வைத்துள்ளனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen