பொய்யே இவர்கள் பிழைப்பு ...!

 ஐயோ என்று எமனம்கதறியபோது வராத ஐனா ஆயிரக்கனக்கில் பொய் உரைந்த மகிந்தா குழு முடிந்து இப்போது நல்லாச்சி என்று வந்தவர்களும் பொய்யாட்சி செய்கின்றார்கள் அதனால்தான் இவர்கள் இப்படிக்கூறுகின்றார்கள்

ஐக்கிய நாடுகள் அமைப்பு புதிதாக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில், பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் சமர்ப்பித்த அறிக்கையில் எவ்வித புதிய பரிந்துரைகளோ நிபந்தனைகளோ கிடையாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஒக்பரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இரண்டாண்டு கால அவகாசம் கோரப்படும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய காரணத்தினால் சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகித்து வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen