வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை
வெளிப்படுத்தக் கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள்
இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமவுரிமை மக்கள் இயக்கத்தினர் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை குறித்த விடயங்களை வலியுறுத்தி, கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 17 ஆம் திகதி சமவுரிமை மக்கள் இயக்கத்தினரும், 18 ஆம் திகதி ஊடகவியலாளர்களும், 19 ஆம் திகதி கலைஞர்களும், 20 ஆம் திகதி தொழிற்சங்கங்களும், 21 ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களும், 22 ஆம் திகதி மத குருமார்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் 23 ஆம் திகதி அனைவரும் இணைந்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சமவுரிமை இயக்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 Kommentare:
Kommentar veröffentlichen