இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரிகின்றதா.?
அன்பார்ந்த புலம் பெயர் தமிழ் உறவுகளே.!!!இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரிகின்றதா.?
சற்று உங்களது வெற்றுக் கண்களால் பார்க்காமல் உங்கள் கண்களை இவர்களின் படங்களில் உற்று பார்த்து இவர்கள் எப்படி இருக்கின்றார்கள் இவர்கள் இழந்தவை ஏன்ன ?
ஏன் ? இவர்கள் ஏன் தங்களது அவயவங்களை இழந்தார்கள்.?
யாருக்காக இழந்தார்கள் இவர்கள் யார் ? ஆம் இவர்கள்தான் முன்னாள் போராளிகள்.!!!
இவர்கள் தமது இனம் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி அதில் இருந்து சுதந்திர தழிழீழம் மலரவேண்டும் என்பதற்காக எமது தேசியத் தலைவர் வழியில் அணிஅணியாக புறப்பட்டவர்கள் இந்த முன்னாள் போராளிகள் எமக்கு இழைக்கப்பட்ட அல்லது சில தனி மனிதர்களால் இளைக்கப்பட்ட துரோகத்தனங்களால் இன்று பல்லாயிரம் எமது உறவுகளையும் எமது மாவீரச் செய்வங்களையும் இழந்து இன்று கூறுகிய வட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்த வட்டத்துக்குள் முன்னால் போராளிகளும் அடங்குவர்.இன்று இவர்களது வாழ்வாதாரத்தை முன்னோக்கி செல்வதற்காக புலம்பெயர் உறவுகளாகிய உங்களை எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள்.
இவர்கள் உங்களது சொத்துக்களையை அல்லது உங்களிடம் உள்ள பெரிய தொகைப்பணத்தையை எங்களுக்கு எழுதித்தாருங்கள் என்று கேட்கவில்லை . அல்லது எங்களையும் உங்கள் புலம்பெயர் நாட்டுக்கு எடுங்கள் என்றும் கேட்கவில்லை அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது தங்களின் வாழ்வாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காண சிறிய உதவியைத்தான். இவர்களை உங்களின் பிள்ளைகளில் ஒருவராக நினைத்து இவர்களுக்கு உதவ முன்வாருங்கள் .!!!
நன்றி.!
உணர்வுள்ள தமிழன்
உணர்வுள்ள தமிழன்
0 Kommentare:
Kommentar veröffentlichen