யாழில் இரண்டு கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் 231 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வயல் காணியிலிருந்து நேற்று இரவு சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த காணி பகுதியில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மீட்கப்பட்ட கஞ்சா சுமார் இரண்டு கோடி பெறுமதியானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட 231 கிலோ கேரளா கஞ்சாவினை யாழ்.சாவகச்சேரி நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen