யாழ். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தனது கணவரால் கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

படுகாயம் அடைந்த மனைவி யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அதி தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை நடைப்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ் திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலதிக விசாரணைகளை கோப்பாய் கொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen